Meenakshi Ponnunga: நீதிமன்றம் வந்த மீனாட்சி.. கடைசி நேரத்தில் நடந்த திருப்பம்.. மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஸ்பெஷல்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கோர்ட்டுக்கு மீனாட்சி கொண்டு வரப்படும் நிலையில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் நடைபெறுகிறது. 

Continues below advertisement

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கோர்ட்டுக்கு மீனாட்சி கொண்டு வரப்படும் நிலையில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் நடைபெறுகிறது. 

Continues below advertisement

கதைக்கரு 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்னவென்று பார்க்கலாம். 

விடுதலை செய்யப்படும் மீனாட்சி 

முன்னதாக சங்கிலியை கொன்றதாக புஷ்பா பணம் கொடுத்து மீனாட்சியை கைது செய்ய வைக்கிறார்.  இதுபற்றி வெற்றிக்கு தெரிய வருகிறது. அவர் திடியனிடம் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என சொல்கிறார். இதற்கிடையில் மீனாட்சியை போலீஸ் ஸ்டேஷனில் கொடுமைப்படுத்துகிறார்கள். இதைப் பார்த்த டீ கொடுக்கும் சிறுவன், வெளியே வந்து சக்தியிடம் நடந்ததை சொல்கிறான். உடனே சக்தி யமுனா,சாந்தா மற்றும் துர்காவுடன் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் போராட்டம் நடத்துகின்றனர். 

இதனிடையே சங்கிலியை போஸ்ட் மார்ட்டம் செய்ய வந்த மருத்துவர் போனில் பேசும் போது சங்கிலி இன்னும் சாகவில்லை இதெல்லாம் ஒரு செட்டப் என்பதை திடியன் தெரிந்து கொண்டு வெற்றியிடம் சொல்கிறார். இன்றைய எபிசோடில் கோர்ட்டுக்கு கொண்டு வரப்படும், மீனாட்சியை புஷ்பா திட்டி தூக்கில் போட சொல்லி கத்துகிறார். 

ஆனால் நீதிபதி இருதரப்பு வாதங்களை கேட்டு மீனாட்சியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். அங்கு வரும் கார்த்திக் நீதிபதியிடம் அனுமதி பெற்று, சங்கிலியை உயிருடன் கூட்டி வருகிறான். கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் சங்கிலி, உயிருடன் இருப்பதால் நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்கிறார். இதனால் மீனாட்சி இந்த கேஸில் இருந்து விடுதலை செய்யப்படுகிறாள்.

இதனையடுத்து வெற்றி கார்த்திக்கிடம் நன்றி சொல்வது மட்டுமல்லாமல் வெற்றி நடந்த சம்பவங்களை கார்த்திக்கிடம் சொல்கிறான். சங்கிலி குடித்துவிட்டு ரூமில் கிடந்ததை கண்டுபிடித்து, அவனை அழைத்து வந்ததாக சொல்கிறான். பிறகு விடுதலையான மீனாட்சி, மெஸ்க்கு சென்று பார்க்கும் பொழுது பொருட்கள் அலங்கோலமாக சிதறி கிடப்பதை கண்டு மெஸ்ஸை தயார் செய்ய சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகிறது. 

Continues below advertisement