Karthigai Deepam Serial Written Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மது ரியாவுக்கு போன் செய்து “நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன் அதுக்கு காரணம் நீதானே எழுதி வைக்கப் போறேன்” என மிரட்டிய நிலையில், இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது ரியா மதுவைப் பார்க்க வர, மது தற்கொலை செய்வதற்காக செட்டப் ஒன்றை ஏற்பாடு செய்து கேமராவையும் ஆன் செய்து வைக்கிறான். வீட்டுக்கு வந்த ரியாவிடம் “நான் தற்கொலை பண்ணிக்க கூடாதுன்னு என் கூட வந்து வாழு. என்கிட்ட இப்ப 10 லட்சம் ரூபாய் இருக்கு, நாம அதை வச்சுக்கிட்டு சந்தோஷமா வாழலாம்” என்று சொல்கிறான்.


ரியா “என்னது 10 லட்ச ரூபாயா? நான் பல கோடிக்கு சொந்தக்காரி ஆகப் போறேன். கூடிய சீக்கிரம் அபிராமி அருணாச்சலத்தை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி கார்த்திக் அருண் ஆகியோரை வீட்டை விட்டு வெளியே தள்ளி அந்த மொத்த சொத்துக்கும் சொந்தக்காரியாகப் போற. அதுக்குத்தான் ஆனந்த காதலிக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்படி இருக்கும்போது நீ 10 லட்ச ரூபாய்க்கு என்னை வானு கூப்பிடுற” என்று சொல்லி பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறாள். 


மறுபக்கம் ரம்யா மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பாகப் பார்க்க, தீபா, அவளைப் பிடித்து “என் ஹஸ்பண்ட் உன்னை பார்க்கணும்னு சொன்னாரு வா” என்று கூட்டிச் சென்று கார்த்திக் முன்னாடி நிறுத்தி, இவதான் அம்மு என்று அறிமுகம் செய்கிறாள். “கார்த்திக் நீங்க இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்க தீபா, “உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என்று கேள்வி கேட்கிறாள். அம்மு “கார்த்திக் என் கம்பெனில தான் வேலை செய்கிறார், எனக்கு முன்னாடியே தெரியும்” என்று சொல்லி நான் தீபாவோட ஃபிரண்ட் என கேஷூவலாகப் பேசுகிறாள். 


அடுத்ததாக ரியா பேசிய வீடியோ ஆதாரத்துடன் மது மண்டபத்துக்கு வர, ஐஸ்வர்யாவின் மீது மோத இவனைப் பார்த்த ஐஸ்வர்யா “இவன் எதுக்கு இங்கு வந்தான்?” என்று யோசிக்கிறாள். பிறகு ரியாவிடம் “நீங்க இங்க இருந்து போயிடுங்க” என்று சொல்ல, அவள் “நான் சவால்விட்ட மாதிரி பரமேஸ்வரி பாட்டி கால்ல ஆனந்தத்தோட சேர்ந்து நான் தான் ஆசீர்வாதம் வாங்குவேன்” என்று சொல்கிறாள். 


அடுத்ததாக மது கார்த்திகை சந்தித்து வீடியோ ஆதாரத்தைக் கொடுக்க, கார்த்திக் ஆனந்தை போன் பண்ணி வரவைத்து வீடியோ ஆதாரத்தை காட்டப் போகும் சமயத்தில் ரியா அவனுக்கு போன் செய்து “மீனாட்சியைக் கடத்தி வச்சிருக்கேன், அவ உயிரோட வேணும்னா நீ எந்த விஷயத்தையும் சொல்லக்கூடாது” என்று மிரட்டுகிறாள். இதனால் கார்த்திக் ஆனந்திடம்  உண்மையை சொல்லாமல் “சும்மா தான் வர சொன்னேன்” என்று சமாளித்து விடுகிறான். 


பிறகு ரியா மண்டபத்துக்கு வந்துவிட கார்த்திக் அப்போ மீனாட்சி பக்கத்துல “இங்கே தான் கடத்தி வச்சிருக்கா” என்று கணக்கு போட்டு மதுவுடன் கிளம்பிச் செல்ல, ரியா தீபாவை சந்தித்து “உன் புருஷனால என்னை ஒன்னும் பண்ண முடியாது” என்று சவால் விட, பதிலுக்கு தீபா “என் புருஷன் உன் முகத்தை நீ கிழிச்சு ஜெயிலுக்கு அனுப்ப தான் போறாரு” என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.