Maari Serial Today Written Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் குழந்தை பாலுக்கு அழ பாம்பு மாரி வீட்டுக்கு வந்து பால் கேட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது மாரி ஒரு பாட்டிலில் பாலைக் கொடுக்க, அதைக் குடித்த மாதிரி நாகம் அங்கிருந்து கிளம்பிச் செல்ல, “இது நேரா சாஸ்திரி வீட்டுக்குத்தான் போகும்” என கணக்கு போடுகிறான் சங்கரபாண்டி. 


மேலும் இந்த விஷயத்தை தாராவிடம் சொன்ன அவன், அந்த பாம்பைத் தொடர்ந்து போக சொல்கிறான். சங்கர பாண்டியனும் பாம்பு பின்னாடியே வர வேறொருவர் வீட்டுக்குள் செல்கிறது. சங்கரபாண்டியும் அந்த வீட்டுக்குள் நுழைய அங்கு ஒரு பெண்மணியின் குழந்தையும் இருக்க, அதுதான் மாரியின் குழந்தை என நினைத்துக் கொள்கிறான். 


சங்கரபாண்டி குழந்தையை தூக்க முற்படும் சமயத்தில் பார்த்துவிடும் அந்த பெண்மணி திருடன் என்று சத்தம் போட, வீட்டில் உள்ளவர்கள் அக்கம் பக்கத்தினர் என எல்லோரும் சேர்ந்து அடித்து துவைத்து எடுக்கின்றனர். 


சைடு கேப்பில் வெளியே வந்த பாம்பு சாஸ்திரி வீட்டுக்குச் சென்று குழந்தைக்கு பால் கொடுக்க, சாஸ்திரி இது உண்மையாகவே தெய்வக் குழந்தை தான் என்று நினைத்து பூரித்து போகிறார். அடுத்ததாக அடி வாங்கிய சங்கர பாண்டி அடையாளம் தெரியாமல் வீட்டுக்கு வர, ஸ்ரீஜாவும் அரவிந்தும் பிச்சைக்காரன் என்று நினைத்து வெளியே போகச் சொல்ல“நான்தான் சங்கர பாண்டி. தீவிரவாதி ஒருத்தனை பிடிக்க போய் அவன் என்னை அடிச்சிட்டான்” என்று அளந்து விட, மாரி “இதப் பாத்தா தீவிரவாதி கிட்ட அடி வாங்கின மாதிரி தெரியலையே” என்று சொல்கிறாள். 


ஏதோ ஒரு வீட்ல திருட்டு வேலை பண்ணி அடி வாங்கிட்டு வந்த மாதிரி இருக்கு என்று சொல்ல, சங்கர பாண்டி ஷாக் ஆகிறார். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க : Rathnam Movie Review: விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!