Maari: கொலைகாரியாக மாறிய மாரி...இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன தெரியுமா?

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

Continues below advertisement

மாரி சீரியலில் சூர்யாவிடம் மாரி பணம் வாங்கியதை பார்க்கும் ஸ்ரீஜா தாராவிடம் சென்று விஷயத்தை சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

Continues below advertisement

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யாவிடம் மாரி பணம் வாங்கியதை பார்க்கும் ஸ்ரீஜா தாராவிடம் சென்று விஷயத்தை சொல்கிறார்.

உடனே தாரா அனைவரையும் கூப்பிட்டு மாரி பத்து லட்சம் பணத்தை வாங்கியதை சொல்கிறாள். மேலும் இது தான் மாரியின் சுயரூபம், அவள் பணத்துக்கு ஆசைப்படுபவள். இந்த சொத்துக்காக தான் இந்த வீட்டிற்கு வந்தாள்‌. இந்த உண்மை நிரூபிக்கப்பட்டு விட்டது என தாரா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

இதனால் அனைவரும் மாரியிடம் ஏன் பணம் வாங்கினாய் என்று கேட்க அவர் மௌனமாக இருக்கிறார். தாரா கேட்டும் பதில் சொல்ல முடியாமல் தவிக்க சூர்யா தயவுசெய்து மாரியிடம் இதைப்பற்றி யாரும் கேட்காதீர்கள் என்று தெரிவிக்கிறார். இதுபோக பிரியா மாரியிடம் என்னால் தான் உங்களுக்கு கெட்ட பேர்  என சொல்லி அழுகிறாள். அதற்கு நீ ஒன்றும் கவலைப்படாதே... முதலில் பணத்தை கொடுத்து அந்த வீடியோ வாங்குற வேலையை பார்க்கலாம் என்று சொல்லி மாரி தேற்றுகிறார். 

 நான் போய் பணத்தை கொண்டு வரேன் என்று சொல்லி விட்டு உள்ளே போகும் நிலையில் அதற்குள் மாரிக்கு தெரியாமல் ஸ்ரீஜா அந்த ஒரிஜினல் பணத்தை எடுத்து விட்டு டம்மி பணத்தை வைத்து விடுகிறார். அது தெரியாமல் பணத்தை எடுத்துக் கொண்டு மாரியும் பிரியாவும் அந்த ரவுடியை பார்க்க போகின்றனர்.

இவர்களுடன் ஸ்ரீஜாவும் செல்கிறார். அந்த ரவுடியிடம் பணத்தை கொடுத்து வீடியோ கேட்கிறார்கள்.  பணத்தை பிரித்துப் பார்க்க அது டம்மி பணமாக இருப்பதை பார்த்து ரவுடி கோவப்பட்டு பிரியாவை கழுத்தை நெறித்து சாகடிக்க பார்க்கிறார். அப்போது மாரி அவனை அடிக்க ரவுடி இறந்து போகிறார். இதை தெரிந்து கொண்ட ஸ்ரீஜா போலீசுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல போலீஸ் அங்கு வருவதை கண்டு மாரி அதிர்ச்சி அடைகிறாள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola