பஞ்சாயத்தில் அமுதா, சிதம்பரத்திடம் பிறந்த குடும்பத்தினருடனான உறவை என்னைக்கும் நான் முறிச்சிக்க முடியாது.. யார் நினைச்சாலும் எதுவும் பண்ண முடியாது என தெரிவிக்கிறார்.


விறுவிறுப்பாக செல்லும் சீரியல் 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.


தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது.  


முன்னதாக, பஞ்சாயத்து ஆட்கள் செந்தில் வீட்டிற்கு வந்து அமுதாவிடம் உங்க அப்பா காசை வெட்டி விட்டு உறவை முறிச்சிகிடலாம்னு சொன்னாரு. உனக்கு கொடுக்க வேண்டியதை பிரிச்சி கொடுத்துரலாம்னு சொன்னாரு.. நீ பஞ்சாயத்துக்கு வந்துரும்மா என சொல்லுகின்றனர்.  






அமுதா பஞ்சாயத்திற்கு வர மறுக்க செந்தில் பஞ்சாயத்துக்கு போகிறார். அங்கு சிதம்பரத்திடம் எனக்கு உங்க கிட்ட இருந்து வரவேண்டிய சொத்து என் வீட்டுக்கு வந்துருச்சு என சொல்லிவிட்டு அவரது சொத்தை வாங்க வரவில்லை என தெரிவிக்கிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என காணலாம்.


பஞ்சாயத்தில், அமுதா சிதம்பரத்திடம் இந்த உறவை என்னைக்கு நான் முறிச்சிக்க முடியாது.. யார் நினைச்சாலும் எதுவும் பண்ண முடியாது. நீங்களே என்னை வேண்டாம்னு சொன்னாலும், எனக்கு நீங்க வேணும் அப்புச்சி, அதனால இந்த உறவை நான் முறிச்சிக்க மாட்டேன் என சொல்கிறாள்.


பின்னர் அன்னம் அமுதாவிடம் வீட்டை விற்று கடனை அடைத்து விடலாம் என சொல்ல, அமுதா அவளிடம் ஒரு 10,000 பணம் வேணும் என சொல்ல, அன்னம் தாலியை எடுத்து கொடுக்க, அமுதா அதை வாங்க மறுக்கிறாள்.  அமுதா மாணிக்கத்திடம் பணம் கொடுத்து வட்டி கட்ட சொல்கிறார்.  அதை செந்தில் மறுத்து வேண்டாம் தானே கட்டி கொள்வதாக சொல்ல,  அன்னலட்சுமியோ குடும்ப மானம் மரியாதை போவதாக அவனை திட்டுகிறாள்.


இதனையடுத்து செந்தில் வட்டி கட்ட அமுதாவுடன் தான் போவேன் என சொல்ல, அமுதா முதல் முறையாக அவருடன் பைக்கில் ஏறி கிளம்புகிறாள். இந்த பக்கம் கிரைண்டர் வந்து இறங்குகிறது. வீட்டு முன்னால் இட்லி, தோசை மாவு இங்கே கிடைக்கும் என போர்டு மாட்டப்படுகிறது. இதனை வடிவேல், பரமு, சின்னா பார்க்க செந்தில் என்னவென்று கேட்க, அன்னலட்சுமி நாங்க பொய் சொல்லலை, திருடலை என முகத்தில் அடித்தாற் போல பதில் சொல்கிறாள். இதற்கிடையில் சிதம்பரம் வட்டிக்கு கொடுத்தவனிடம் பணத்தை செட்டில் செய்கிறார். செட்டில் செய்தபின், ரோட்டில் ஒரு பொம்பளையை சேலையை பிடித்து இழுத்தது தவறு என அவனை கன்னத்தில் அறைகிறார்.