Maari Serial: மாரிக்கும் தாராவுக்கும் இடையே ஏற்பட்ட புதிய போட்டி.. வெற்றி யாருக்கு? மாரி சீரியல் அப்டேட்!

பொங்கல் கொண்டாட மாரி ஏற்கனவே எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்க, தேவி காலனி மக்களும் அந்த இடத்திற்கு வந்து விடுகின்றனர்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. 

Continues below advertisement

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பொங்கலைக் கொண்டாட தாராவின் குடும்பத்தினர் எல்லோரும் மாரி வீட்டிற்கு வந்திருந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது பொங்கல் கொண்டாட மாரி ஏற்கனவே எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்க, தேவி காலனி மக்களும் அந்த இடத்திற்கு வந்து விடுகின்றனர். பொங்கலுக்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி வைத்திருப்பதாக மாரி சொல்ல, தாரா தாங்களும் வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து வந்திருப்பதாக சொல்கிறாள். 

அதனால் ஜெகதீஷ் “இரண்டு பொங்கலாகவே வச்சிடுவோம்” என்று சொல்கிறார். மேலும் அப்பகுதி மக்கள் “யாருடைய பொங்கல் முதல்ல பொங்குதுன்னு போட்டி வச்சுக்கலாம்” என்று சொல்கின்றனர். மேலும் “வலது பக்கம் தூங்கினால் தான் நல்லது, தெற்கு பக்கம் தூங்கினால் அபசகுணம்” எனவும் சொல்ல, மாரி மற்றும் தாரா இருவரும் பொங்கல் வைக்கத் தயாராகின்றனர். 

முதலில் மாரியின் பொங்கல் பொங்க கூடாது எனத் திட்டமிடும் தாரா, சங்கர பாண்டியை வைத்து மாரியின் விறகில் தண்ணீர் ஊற்ற வைக்கிறார். பிறகு தாரா அடுப்பைப் பற்ற வைத்து பொங்கலை வைக்கத் தொடங்க , மாரி அடுப்பைப் பற்ற வைக்க கஷ்டப்படுகிறாள். இருந்தாலும் அடுப்பைப் பற்றவைத்து எரியவிடத் தொடங்க இறுதியில் மாரி வைத்த பொங்கல் வலது பக்கம் பொங்கி விழுகிறது. 

அடுத்து தாராவின் பொங்கல் தெற்கு பக்கம் பொங்கி விழ, சங்கர பாண்டி தெற்கு பக்கம் பொங்கி விழக்கூடாது என்று சொன்ன பாட்டியை கூட்டிச் சென்று “அப்படி விழுந்தால் என்ன ஆகும்” எனக் கேட்க, “அந்த நபர் செத்துப் போயிடுவாங்க” என்பது ஐதீகம் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola