தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. 


இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் மாரி எல்லோருக்கும் துணி எடுத்து வந்து கொடுத்து பொங்கல் விழாவுக்கு வீட்டிற்கு வர சொல்லி அழைப்பு கொடுக்க, தாரா, மாரி கொடுத்த புடவையை வன்மத்துடன் எரித்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது மாரி மற்றும் சூர்யா என இருவரும் சேர்ந்து எல்லோரும் வீட்டிற்கு வருவதால் பொங்கல் கொண்டாட அலங்காரங்களை செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஜெகதீஷ் வீட்டில் இருந்து எல்லோரும் மாரி வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். 


வீட்டில் உள்ள அனைவரும் மாரி கொடுத்த டிரஸ்ஸை அணிந்திருக்க, தாரா மட்டும் வேறு ஒரு புடவையில் வந்திருப்பதைப் பார்த்து ஜெகதீஷ் “ஏன் மாரி கொடுத்த புடவையை கட்டல? இதிலிருந்தே நீ அவளுக்கு எதிராக இருப்பதும் அவள் மீது வன்மத்துடன் இருப்பது தெரிகிறது” எனப் பேசுகிறார். 


ஆனால் தாரா “அந்த புடவை எனக்கு செட் ஆகல, அதுவும் இல்லாம கடைசி நேரத்துல பிளவுஸும் அமையல, அதனாலதான் அதைக் கட்டல, வேற எதுவும் இல்லை” என்று சமாளிக்கிறாள். பிறகு எல்லோரும் மாரி வீட்டிற்கு வர, மாரி மற்றும் சூர்யா அனைவரையும் வரவேற்று சந்தோஷப்படுகின்றனர். மேலும் மாரி சூர்யா செய்திருக்கும் அலங்காரங்களை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!


Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!