தமிழ் சின்னத்திரை என்றவுடன் நினைவுக்கு வருவது சன் டிவி தான். அந்த அளவுக்கு டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் சன் டிவிக்கு அடுத்த இடத்தை விஜய் டிவி இடம்பெற்றுள்ள நிலையில் எப்போதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சி எட்டி பார்க்கிறது. 


 



டி.ஆர்.பி. ரேட்டிங்:


டி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையாக வைத்தே எந்தத் தொலைக்காட்சி முன்னிலை வகிக்கிறது என்றும், அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எந்த இடத்தை பிடித்துள்ளது என்றும் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்கும் இந்த வாரத்தின் டி.ஆர்.பி ரேட்டிங்கும் ஒரு சில மாற்றங்களை காண முடிகிறது. சன் டிவியை பின்னுக்கு தள்ளி விஜய் டிவி முன்னேற முயற்சித்து வருகிறது. 


யார் முதலிடம்?


அந்த வகையில் இந்த வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்ட் வெளியானதில் எந்தெந்த சீரியல்கள் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளன என்பதை புள்ளிவிகிதத்துடன் பார்க்கலாம். கடந்த பல வாரங்களாக முதல்  இடத்தை யாருக்குமே விட்டுக்கொடுக்காமல் தக்க வைத்துள்ளது சன் டிவியின் 'சிங்கப்பெண்ணே' சீரியல். 


கடந்த வாரம் 10.15 புள்ளிகளை பெற்று இருந்த நிலையில் இந்த வாரம் 9.46 புள்ளிகளை பெற்றுள்ளது. அதே  9.68 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தொடர்ச்சியாக பல வாரங்களாக சைத்ரா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'கயல்' சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரம் 8.74 புள்ளிகளை பெற்று இருந்த நிலையில் இந்த வாரம் 8.67 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் இடம்பெற்றுள்ளது. 


 




விஜய் டிவியின் மிகவும் பிரபலமான சீரியலான 'சிறகடிக்க ஆசை' சீரியல் கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் சன் டிவியின் 'வானத்தை போல' சீரியலை முந்திக்கொண்டு நான்காவது இடத்தை 8.19 புள்ளிகளுடன் முன்னேறியுள்ளது. ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள சன் டிவியின் 'வானத்தை போல' சீரியல் 7.73 புள்ளிகளை பெற்றுள்ளது. 


கடந்த வாரம் 8.23 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருந்த இனியா சீரியல் அதே இடத்தில் இருந்தாலும் இந்த வாரம் அதன் புள்ளிகள் 7.49 புள்ளியாக குறைந்துள்ளது. 7.18 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் சுந்தரி சீரியல் அதே இடத்தை தக்கவைத்துள்ளது. 


பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்:


விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடர் 7.02 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தையும் பாண்டியன் ஸ்டோர்ஸ்  தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியல் 5.98 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது. பத்தாவது இடத்தை மீண்டும் விஜய் டிவியே இடம்பிடித்துள்ளது. 5.45 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது 'சின்ன மருமகள்' சீரியல்.  


இது தான் இந்த வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியல். அடுத்த வாரம் கதைக்களத்தை பொருத்து சீரியல்களின் இடங்களில் மாற்றங்கள் நேருவும் வாய்ப்புகள் உள்ளது. அதுவரையில் பொருத்து இருந்து அனைத்து சீரியல்களையும் ரசிக்கலாம்.