தமிழில் உள்ள பிரபலமான தொலைக்காட்சியில் ஒன்றாக ஜீ தமிழ் திகழ்கிறது. இந்த தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இது மிகவும் பிரபலமான தொடர் ஆகும். நேற்றைய எபிசோடில் அம்பிகாவுக்கு உண்மை தெரிய வர, ரியா மற்றும் ரம்யா என இருவரும் சேர்ந்து ரூமுக்குள் அடைத்து வைத்த நிலையில் இன்று  என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம். 


மணமேடையில் தீபா உருவத்தில் ரியா:


அதாவது, தீபா ரௌடிகளின் பிடியில் இருந்து தப்பித்து ஆட்டோவில் வந்து கொண்டிருக்க இங்கே கார்த்திக்கு ஒரு போன் கால் வருகிறது. அபிராமிக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் டாக்டர் ப்ரியா போன் செய்து, சில தினங்களுக்கு முன்னர் அபிராமி தன்னை பார்க்க வந்ததாக சொல்கிறார். அவருக்கு உடம்பு சரியில்லை, கல்யாணம் முடிந்ததும் மருத்துவமனைக்கு அழைத்து வர சொல்லி போனை வைக்கிறார். 


ரியா மீண்டும் தீபா மாஸ்க் அணிந்து ரெடியாக, அவளை மணமேடைக்கு அழைத்து வந்து உட்கார வைக்கின்றனர். தீபா வந்து கொண்டிருந்த ஆட்டோ ரிப்பேர் ஆகி பாதியில் நிற்கிறது. கார்த்திக் டாக்டரை நேரில் சந்தித்து பேசி விடலாம் என்று கிளம்பி ப்ரியா வீட்டிற்கு வருகிறான். ப்ரியா, அபிராமி, அம்பிகாவுடன் தன்னை சந்திக்க வந்திருந்ததாக சொல்கிறார். 


கார்த்தி எங்கே?


அவங்களை ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக சொல்லி இருந்தேன். ஆனால் அவங்க உன் கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசைபட்டாங்க. கல்யாணம் முடிந்ததும் கூட்டிட்டு வந்துடுங்க, ட்ரீட்மெண்ட் ஆரம்பித்து விடலாம் என சொல்ல கார்த்திக் மீண்டும் மண்டபத்திற்கு கிளம்பி வருகிறான். 


தீபா வந்த ஆட்டோவும் சரியாகி விட மீண்டும் மண்டபத்திற்கு கிளம்பி வருகிறாள். கார்த்திக் காரில் வந்து கொண்டிருக்கும் போது, ஒருவன் ஒரு பெண்ணின் தாலியை எடுத்து கொண்டு ஓட கார்த்திக் அவனை துரத்தி செல்கிறான். மண்டபத்தில் கடைசி நிமிடத்தில் கார்த்தி எங்கே போனான்? என்று டென்ஷனாகின்றனர். 


அருண், ஆனந்த் போன் செய்ய கார்த்திக் போன் காரில் இருப்பதால் போனை எடுக்காமல் இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.