ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வரவேற்பு பெற்றது. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி மற்றும் கார்த்திக் என இருவரும் மாயா மற்றும் மகேஷை பார்த்து விட்டு, வீட்டிற்கு கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கர்ப்பமான மாயா:
மாயா வாந்தி எடுக்க அப்பாவி போல் இருந்த மகேஷ் தனது கெட்டப்பை களைத்து வில்லன் போல் மாறி என்ன கர்ப்பமா? என்று சைகையில் கேட்க மாயாவும், ஆமாம் என்று சொல்கிறாள். அடுத்து இருவரும் ஹாஸ்பிடல் வர, டாக்டர் இவங்களுக்கு "இதுவே வேலையா போச்சு.. அடிக்கடி அபார்ஷன் பண்ணுறது உங்க ஹெல்த்துக்கு நல்லது இல்ல" என்று வார்னிங் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் சாமுண்டீஸ்வரி ப்ரோக்கரை வர வைத்து மாப்பிள்ளை போட்டோக்களை பார்க்க, கார்த்திக் "யாருமே நல்லா இல்ல.. அவங்க எவ்வளவு அழகா இருக்காங்க.. அவங்களுக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளை இருக்க வேண்டாவா?" என்று சொல்கிறான்.
கண்டிஷன் போடும் சாமுண்டீஸ்வரி:
அடுத்து சாமுண்டீஸ்வரி "வீட்டோட மாப்பிள்ளையா இருக்கணும்.. நல்ல அஸ்தஸ்துல இருக்க குடும்பமாகவும் இருக்கணும்" என்று கண்டிஷன் போடுகிறாள். இங்கே அபார்ஷன் போஷன் முடிந்ததும் வீட்டிற்கு வந்த மாயா, "நீ இப்படியே அப்பாவி போலவே நடிக்கணும்.. அப்போது தான் அந்த வீட்டு சொத்தை அடைய முடியும்" என்று மகேஷ்க்கு ஆர்டர் போடுகிறாள். அடுத்து மகேஷ் ரேவதிக்கு போன் செய்து அண்ணி உங்களை பார்க்கணும்னு சொல்றாங்க என்று சொல்லி போனை வைக்கிறான்.
இதை தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி முருகன் போட்டோ முன்னாடி உட்கார்ந்து கார்த்தியின் வாழ்க்கையை பற்றி பேசி வருத்தப்படுகிறாள். எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு வர வேண்டும் என்று வேண்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.