தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியை கடத்திய ரவுடிகளில் மணி என்பவனை தீபா காட்டிக் கொடுத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, போலீஸ் “அந்த மணியோட வீடு தெரியும், அங்க போய் விசாரித்தால் ஏதாவது உண்மை தெரிய வரும்” என்று சொல்ல, மணி வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக மணியின் மனைவி மட்டும் தனியாக இருக்கிறாள்.
கார்த்திக் அவளிடம் மணி குறித்து விசாரிக்க, “அவரைப் பத்தி தெரியாது, வாரத்தில் ஒரு நாள் தான் வீட்டிற்கு வருவார்” என்று சொல்லி மழுப்புகிறாள். கார்த்திக் வீட்டில் நடந்த பிரச்சனைகள் அனைத்தையும் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்கிறான். கடைசியாக அந்தப் பெண்மணி “அவர் எங்க இருக்காருன்னு உண்மையாகவே எனக்கு தெரியாது” என்று சொல்கிறாள்.
மேலும் “அவரின் போன் நம்பர் என்கிட்ட இருக்கு, அந்த நம்பரை நான் தரேன், அனால் அவருக்கு எந்த ஆபத்தும் வராதுனு எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க” என்று சொல்ல, கார்த்திக்கும் “கண்டிப்பாக உங்க கணவருக்கு எந்த ஆபத்தும் வராது” என்று சத்தியம் செய்கிறான்.
அடுத்ததாக அந்தப் பெண்மணி போன் நம்பரைக் கொடுக்க, கார்த்திக் நம்ம யாரவது பேசினால் சந்தேகம் வந்து விடும் என்பதால் அந்த வீட்டு ஹவுஸ் ஓனர் பெண்மணி போனில் இருந்து போன் பண்ணி தான் சொல்லுவது மாதிரி பேச சொல்கிறான்.
அந்த பெண்மணியும் போன் பண்ண, முதலில் மணி எடுக்காமல் இருக்க, மீண்டும் போன் பண்ண எடுத்து பேசுகிறான். “உன் பொண்டாட்டி பாக்கியத்துக்கு பிரசவவலி வந்துடுச்சி, ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கோம். ஆனால் டாக்டர் சீரியஸ்னு சொல்றாங்க. நீ கையெழுத்து போடணும்னு சொல்றாங்க. உடனே கிளம்பி வா” என்று கூப்பிட, மணி “என்னால் இப்போ வர முடியாது” என்று சொல்கிறான்.
“நீ கையெழுத்து போட்டா தான் உன் பொண்டாட்டிக்கு பிரசவம் பார்ப்பாங்களாம்” என்று சொல்லி நம்ப வைக்க மணியும் வருவதாக சொல்கிறான். “ஹாஸ்பிடலில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து போலீஸ் மப்டியில் காத்திருக்க, மணி ஹாஸ்ப்பிடல் வந்து மனைவி இருக்கும் ரூமுக்குள் செல்ல அவனை உள்ளவே வைத்து லாக் செய்கின்றனர். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Saranya Ponvannan: ரசிகர்களின் பாசக்கார அம்மா சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்தாரா? உண்மை என்ன?