தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் டெட்பாடியை அடையாளம் காணப்போக, அது அபிராமி இல்லை என்று தெரிய வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது அபிராமியுடன் இன்றைய எபிசோட் தொடங்குகிறது. அபிராமி தூரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு வந்து அங்கு படுத்திருக்கிறாள். ஐயர் கோயிலை மூடப்போகும் சமயத்தில் அபிராமியைப் பார்த்து “யாரு நீங்க? கோயிலை மூடணும்” என்று சொல்ல, அபிராமி “வீட்டில் ஒரு பிரச்னை. அதனால் இன்னைக்கு மட்டும் இங்க தங்கிக்கிறேன்” என்று அனுமதி கேட்க அய்யரும் சம்மதம் சொல்கிறார்.
மறுபக்கம் ஐஸ்வர்யா ரியாவை சந்தித்து “நீ எங்ககூட கூட்டு சேர்ந்துடு, அபிராமி எங்கே இருப்பாங்கனு எனக்கு தெரியும். அவங்க மனசு கஷ்டமா இருந்தா ஒரு கோயிலுக்கு போவாங்க, இப்பவும் அங்கே இருக்க தான் வாய்ப்பு இருக்கு, அங்கேயே வச்சு அவங்கள தீர்த்து கட்டிடலாம், மீனாட்சியை வீட்டை விட்டு வெளியே துரத்தி இந்த வீட்டை நம்ம கண்ட்ரோல்ல கொண்டு வரலாம்” என்று சொல்ல, ரியா பயந்து நடுங்குகிறாள்.
ஐஸ்வர்யா அவளது மண்டையைக் கழுவி கூட்டு சேர்கிறாள். மறுபக்கம் ஆனந்த் “நீ தான் அம்மாவை எங்கயோ மறைச்சு வச்சிருக்க, எனக்கு நல்லாவே தெரியும்” என கார்த்தியிடம் சண்டையிடுகிறான். அபிராமி கோயிலில் திருப்பணி செய்து மன நிம்மதியைத் தேடுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.