தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி குடும்பத்துடன் கோவிலுக்கு வர பூசாரி உண்மையை கண்டுபிடிக்க ஒரு பூஜையை சொன்ன நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, கார்த்திக் பூஜை குறித்து கேட்டு ஷாக்காகி அம்மாவிடம் இந்த விஷ பரீட்சை எல்லாம் வேண்டாம் என சொல்ல முடிவெடுக்கிறான். அதனை தொடர்ந்து அபிராமியிடமும் இது குறித்து பேச அங்கு வந்த ஐஸ்வர்யா “என்ன தம்பி இப்போ பேக் வாங்குறீங்க? என்னை பத்தி நீங்க தப்பா சொல்லி இருக்கீங்க, இது நான் இல்லனு நிரூபிக்கணும், அதுக்கு இந்த பூஜை நடக்கணும்” என உறுதியாக சொல்கிறாள்.
இதனைக் கேட்ட கார்த்திக் மற்றும் மைதிலி இருவரும் குழப்பம் அடைகின்றனர். பிறகு அம்மன் ஒரு குறி சொல்லும் பெண்ணாக தோன்றி ஐஸ்வர்யாவிடம் வந்து பேச, “நீங்களும் அதே பூசாரி குரூப் தானே, ஏதாவது சொல்லி பணம் பறிக்க வந்திருக்கீங்களா” என அவரை பேச விடாமல் துரத்தி அனுப்புகிறாள்.
அதனைத் தொடர்ந்து பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்க, ஐஸ்வர்யா தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து பாம்பாட்டி ஒருவரை வர வைத்து பூஜை நடக்கும் போது பாம்பை விட்டு கார்த்தியை கடிக்க வைக்கணும் என திட்டம் தீட்டுகிறாள். இதன் மூலம் கார்த்திக் தான் இதுக்கெல்லாம் காரணம் என பிரச்னையை அவன் பக்கம் திசை திருப்பி தப்பிக்க கணக்கு போடுகிறாள்.
இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.