ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மருத்துவமனையில் கண்விழித்த நட்சத்திரா மீண்டும் கார்த்தியின் வீட்டிற்குள் நுழைய ஐஸ்வர்யாவுடன் கூட்டு சேர்ந்து அபிராமியை வர வைத்து இன்னும் சில மணி நேரங்களில் நான் இறந்து விடுவேன் என்று சொல்லி டிராமா போட்டு அபிராமியின் மனசை மாற்ற அவள் கார்த்திக்கை கூட்டிட்டு நட்சத்திராவை வீட்டுக்கு அழைத்து போவதை பற்றி பேசினாள்.
இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் கார்த்திக்கும் ஹாஸ்பிடலுக்கு வந்து இறங்க நட்சத்திராவை பரிசோதனை செய்த டாக்டர் “கொஞ்சம் கொஞ்சமா அவங்களுடைய உடல் உறுப்புகள் செயலிழந்து கொண்டே வருகிறது. அவங்களுடைய உடல் உறுப்புகளை தியாகம் செய்தால் ஒரு நான்கு ஐந்து பேருக்கு வாழ்க்கை கிடைக்கும்” என்று சொல்ல, அபிராமி “உயிரோடு இருக்கும்போது அது எப்படி சாத்தியம்” என்று கேள்வி கேட்கிறாள்.
மாத்திரை கொடுத்து செயற்கையான முறையில் மூளைச்சாவு அடைய செய்யலாம் என்று சொல்ல பிறகு அபிராமி, கார்த்திக் ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவிக்க, நட்சத்திராவும் ஐஸ்வர்யாவும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர்.
பிறகு நட்சத்திராவை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று ஆபரேஷனுக்கு ஏற்பாடுகள் நடக்க, விட்டால் கொன்றுவிடுவார்கள் போல என பயந்து “நான் வீட்டுக்குள்ள வருவதற்காக இப்படி பொய் சொல்லி நடிச்சேன்” என்று உண்மையை ஒப்புக்கொண்டு என விட்டுடுங்க என்று அபிராமி காலில் விழ நட்சத்திராவின் பிளான் மொத்தமாக வெளியே வருகிறது.
உடனே அபிராமி “நீ எல்லாம் திருந்தவே மாட்ட, உன்னை நம்பி நான் இங்கு வந்தேன் பாரு” என்று அவளை திட்டி விட்டு வெளியே செல்ல கார்த்திக் ஐஸ்வர்யாவிடம் வந்து “என்ன அண்ணி இந்த பிளானும் ப்ளாப் ஆகிடுச்சா?” என்று நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதைத் தொடர்ந்து கார்த்திக் “நட்சத்திரா எப்பவும் திருந்த மாட்டாள், ஆனால் தீபா அப்படி கிடையாது. ரொம்ப நல்ல பொண்ணு. அவ ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தானு எனக்கு தெரியல, தயவு செஞ்சு அவளை ஏத்துக்கங்க” என்று சொல்ல பதில் ஏதும் பேசாமல் அபிராமி அப்படியே நிற்கிறாள்.
பிறகு அபிராமி சரி நீ கிளம்பி போயிட்டு வா என்று சொல்லி கார்த்திக்கை அனுப்பி வைக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.