ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் இருக்கும் அபிராமியிடம் கடத்தியது யாரோ பிசினஸ் எதிரி என்று பொய் சொன்ன நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தீபா “ஏன் அத்தை கிட்ட பொய் சொன்னீங்க” என்று கேள்வி கேட்க, அவன் “அதுக்கு ஒரு காரணம் இருக்கு” என்று சொல்கிறான். அடுத்ததாக கதிர் அட்மிட் செய்யப்பட்டு இருக்கும் ஹாஸ்பிடலுக்கு வரும் கார்த்திக், கதிர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
அதனால் “நீங்க கதிருக்கு சுய நினைவு வந்து விட்டதாக சொல்லுங்க, மற்றவற்றை அப்புறம் பாத்துக்கலாம்” என்று சொல்கிறான். “யாராவது பார்க்க வந்தா எனக்கு தகவல் கொடுங்க” என்றும் சொல்கிறான். இங்கே வீட்டுக்கு வரும் நட்சத்திரா, அபிராமியை சந்தித்து “இந்த வீட்டோட சமையல் வேலையை மீனாட்சி கவனிச்சிக்கறாங்க, நிர்வாகத்தை ஐஸ்வர்யா அக்கா கவனிச்சிக்கறாங்க.. ஆனால் உங்களை பாத்துக்க யாரும் இல்ல, நான் தானே பார்த்துக்கணும்? அதனால் தான் பழம் எல்லாம் வாங்கி வந்திருக்கேன்” என்று ஐஸ் வைத்து பேசுகிறாள்.
அது மட்டுமில்லாமல் “கார்த்தியோட கல்யாணம் ஆகி இருந்தா இந்த வீட்ல இருந்து உங்களை பாத்துட்டு இருப்பேன்” என்று சொல்ல, அபிராமி “என்னுடையப பரம்பரை வளையலை உனக்கு தரேன்” என்று உள்ளே போகிறாள். இதற்கிடையில் நட்சத்திரா தீபாவிடம் “இப்படியே பேசி பேசி இந்த வீட்டோட மருமகளாகி விடுவேன், உன்னை கூடிய சீக்கிரம் வீட்டை விட்டு வெளியே அனுப்பறேன்” என்று சவால் விடுகிறாள்.
ஹாஸ்பிடலில் டாக்டர், கதிருக்கு பழைய நினைவுகள் வந்து விட்டது என்று சொல்ல, அதைக் கேட்கும் வார்டு பாய் நட்சத்திராவுக்கு தகவல் சொல்ல, அவள் உடனடியா ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.