ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் துரையின் குழந்தையை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திக்கு அம்மாவையும் தீபாவையும் கடத்தியது துரை தான் என்ற உண்மை தெரிய வருகிறது, இன்னொரு பக்கம் ரவுடிகளால் கட்டப்பட்டிருக்கும் அபிராமி சேரில் உட்கார்ந்து அப்படியே மயங்கத் தொடங்க, தீபா பதற்றம் அடைகிறாள்.
கதவை தட்டி ரவுடிகளிடம் அபிராமிக்காக தண்ணீர் கேட்க அவர்கள் கொடுக்க மறுக்கின்றனர், இதனால் தீபா என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள். மேலும் ரவுடிகளிடம் கார்த்திக் வந்து எங்களை காப்பாற்றுவார் என்று பேசி கொண்டிருக்கிறாள்.
அந்த நேரம் பார்த்து கார்த்திக் கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்து ரவுடிகளை அடுத்து துவம்சம் செய்து தீபாவையும் அபிராமியையும் அங்கிருந்து மீட்கிறான். அபிராமியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து விட்டு மீண்டும் துரை வீட்டுக்கு வருகிறான்.
இங்கே துரை கார்த்திக்கு பயந்து வேகவேகமாக வெளியே கிளம்பி கொண்டிருக்க கார்த்திக் வந்து துரையை அடிக்கப் பாய குழந்தையை பார்த்ததும் அடிக்காமல் நிறுத்தி விடுகிறான், மேலும் அவன் துரையிடம் “இதுக்கு முன்னாடி உன் வீட்டுக்கு வந்த போது ஸ்கூல்ல எல்லாரும் என் அப்பாவை வில்லன் வில்லனு சொல்லி கலாய்க்கிறாங்க” என்று சொல்லி வருத்தப்பட்டதை சொல்கிறான்.
இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.