International Friendship Day: ஃப்ரெண்ட்ஷிப் தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி கலர்ஸ் தொலைக்காட்சியில் இரண்டு படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.


‘ஃப்ரெண்ட்ஷிப் ' - இந்தப் படத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகை லாஸ்லியா ஆகியோர் அறிமுகமானார்கள். ஜான் பால்ராஜ் - சாம் சூர்யா ஆகியோர் எழுதி இயக்கிய படம் இப்படத்தில் அர்ஜூன் மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


கல்லூரியில் நடக்கும் ‘ஃப்ரெண்ட்ஷிப் ' என்பது ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதையாகும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் தங்கள் பேட்சில் உள்ள ஒரே பெண்ணான அனிதாவுடன் நட்பு கொள்ளும் நிலையில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொல்லப்படுகிறார். அனிதாவின் இரண்டு நண்பர்கள் பகத் சிங் (பஜ்ஜி) & ஜீவா (Harbhajan Singh & Sathish) ஆகியோர் அனிதாவுக்கு நீதி கிடைக்க உதவுகிறார்கள், நட்பின் ஆழ்த்தைப் புரிய வைக்கும் இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 6, 2023 ஞாயிற்றுக்கிழமை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.


‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ - அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்துள்ள படம் நட்புனா என்னனு தெரியுமா. இப்படத்தை விப்ரா புரொடக்‌ஷன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.


சிவா (கவின்), ராஜு (ராஜு ஜெயமோகன்), மற்றும் மணிகண்டன் (அருண்ராஜா காமராஜ்) அனைவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள், ஒரே ஊரில் வாழ்பவர்கள், பால்ய நண்பர்கள். படிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், இலக்கில்லாமல் சுற்றித் திரிகிறார்கள். பல ஆண்டுகளை வீணடித்த பிறகு, சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்கிறார்கள். நண்பர்கள் திருமண திட்டமிடல் ஆலோசகர்களாக (Wedding Planners) மாறுகிறார்கள்.


அவர்களுக்கு போட்டியாளர் ரமணன் (இளவரசு) ஒரு மூத்த திருமண திட்டமிடுபவர். இப்போது அவர்கள் வாழ்க்கையில் ஸ்ருதி (ரம்யா நம்பீசன்) வருகிறார். மூன்று நண்பர்களும் அவரைக் காதலிக்கிறார்கள். அங்கிருந்து, அவர்களின் சமன்பாடு மாறுகிறது, மேலும் நட்பு முறியத் தொடங்குகிறது. ஸ்ருதி யாரை காதலிப்பார்? அவர்களின் நட்பு இயல்பு நிலைக்கு திரும்புமா என்பனவற்றை மையப்படுத்தி நகரும் இப்படம் ஆக்ஸ்ட் 6ஆம் தேதி 7:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.