ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா கோயிலுக்கு கிளம்பும்போது முருகன் சிலையை கும்பிட அது தீப்பற்றி எரிந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். கார்த்திக் அவளை விபத்தில் இருந்து காப்பாற்றிய நிலையில் எல்லோரும் கோயிலுக்கு வருகின்றனர்.


அபிராமி கோயிலுக்கு வந்தும் சந்தோஷம் இல்லாமல் முகத்தில் ஏதோ ஒரு யோசனையுடன் இருக்க தீபா இதை பார்த்து வருத்தம் அடைகிறாள். இருந்த போதிலும் தாலி பிரித்துப் கோர்ப்பதற்கான எல்லா சடங்குகளும் நடக்கத் தொடங்க ஐஸ்வர்யா இதை எப்படியாவது தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என திட்டம் போட்டு மெடிக்கல் ஷாப் சென்று நெஞ்சுவலி ஏற்படுவதற்கான மாத்திரையை கேட்கிறாள்.


கடைக்காரன் அப்படியெல்லாம் மாத்திரை கொடுக்க முடியாது, அதற்கு அதிக செலவாகும் என்று சொல்ல ஐஸ்வர்யா பணத்தை கொடுத்து மாத்திரையை வாங்கி வருகிறாள். இந்த மாத்திரையை அருணாச்சலத்திற்கு கொடுக்கலாம் என பாலில் கலந்து கொடுக்கிறாள்.


மறுபக்கம் சடங்குகள் அனைத்தும் முடிவடைந்து தீபாவை அழைத்து வந்து கார்த்தியின் பக்கத்தில் உட்கார வைக்கின்றனர். இன்னமும் அருணாச்சலத்திற்கு நெஞ்சுவலி வராததால் ஐஸ்வர்யா என்ன மாமா ஒரு மாதிரி இருக்கீங்க என்னாச்சு என்று கேட்க, அவர் காலையிலிருந்து சாப்பிடாமல் இருப்பதினால் டயர்டா இருக்கு என கூறுகிறார்.


ஏன் உங்களுக்கு தான் பால் கொடுத்து விட்டேனே, குடிக்கலையா என்று கேட்க விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகள் அந்தப் பாலை தட்டி விட்டதாக சொல்ல பிளான் வேஸ்ட் ஆகிடுச்சே என்று கடுப்பாகிறாள் ஐஸ்வர்யா. இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.