சின்னத்திரை நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. பிரசவத்திற்காக அவர் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகினார். இது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. சீரியலில் இருந்து விலகினாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா அவ்வப்போது கணவர் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். 


 



 


 


லேட்டஸ்ட் தகவல் :


விஜய் டிவியில் இருந்து விலகிய ஆலியா மானசா மீதும் சன் டிவி மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் 'இனியா' சீரியல் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனங்களை கொள்ளையடிக்க தயாராகி வருகிறார். ஏற்கனவே இந்த புதிய சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் மற்றும் நாட்கள் குறித்த விவரம் தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. 


 







வரும் திங்கள்  முதல் இனியா:


சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ஆலியா மானசா நடிக்கும் 'இனியா' சீரியல் வரும் திங்கள் டிசம்பர் 5ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் மீண்டும் ரியல் கணவர் சஞ்சீவுடன் ரீலிலும் ஜோடி சேரப்போகிறார் ஆலியா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் முதல் சீனில் ஆலியா மானசா இருவரும் ஜோடியாக நடித்ததற்கு பிறகு மீண்டும் இந்த சீரியல் மூலம் ஜோடி சேர்க்கிறார்கள். விஜய் டிவியில் கிடைத்த வரவேற்பு ஆலியாவிற்கு சன் டிவியிலும் கிடைக்குமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.  


சன் டிவியின் மிகவும் பிரபலமான தொடரான ரோஜா சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. தற்போது 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் முடிவடைந்த உடன் அந்த நேரத்தில் ஆலியா மானசா - சஞ்சீவ் நடிப்பில் 'இனியா' தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.