சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் 'இலக்கியா'. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை ஹீமா பிந்து. இவர் தற்போது இலக்கியா சீரியலில் இருந்து விலகுவதாக போஸ்ட் மூலம் அறிவித்துள்ளார்.
இலக்கியாவில் ஹீமா பிந்து :
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியலான 'இதயத்தை திருடாதே' சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹீமா பிந்து. அதன் மூலம் அவருக்கு சன் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் கிடைத்த இந்த வாய்ப்பு வெகு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.
நல்ல வரவேற்பு :
மதிய நேரங்களில் ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் சித்தி 2 சீரியல் பிரபலம் நந்தன் லோகநாதன், ரூபஸ்ரீ, மீனாவேம்புரி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வாருகிறார்கள். டிஆர்பி ரேட்டிங் வரிசையிலும் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை ஹீமா பிந்து தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹீமா பிந்துவின் போஸ்ட் :
இலக்கியா சீரியலில் இருந்து ஹீமா பிந்து விலகுவதற்கான காரணத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். "என்னுடைய சக நடிகர்கள், ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் என்றுமே நன்றி கடன் பட்டுள்ளேன். கனத்த இதயத்துடன் இலக்கியா சீரியலை விட்டு விலகுவதாக முடிவு எடுத்துள்ளேன். என்னுடைய இந்த முடிவு உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருந்ததால் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இதனால் நீங்கள் வருத்தப்படாதீர்கள்.
இந்த வெற்றிகரமான சீரியலில் நானும் ஒரு பங்காக இருந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். எனக்கு கொடுத்த அன்பையும் ஆதரவையும் மற்றவர்களும் கொடுங்கள். என்னுடைய இந்த முடிவுக்கு பக்கபலமாக இருந்ததற்கு நன்றி. அன்புடன் நன்றியுடன் பிந்து! என பகிர்ந்துள்ளார்.
இனி இலக்கியாவாக :
இலக்கியா சீரியலில் இனி இலக்கியாவாக நடிகை ஷாம்பவி குருமூர்த்தி நடிக்க உள்ளார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இனி இலக்கியாவாக ரசிகர்களின் வரவேற்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.