தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாரதா சென்னை வந்து குடும்பத்தாரிடம் ஆதி கல்யாணம் பற்றி சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது ஸ்வேதா ரூமுக்குள் சென்று தனக்கும் இருக்கும் கோபத்தை மறைத்துக்கொண்டு ஆதியை பழி வாங்க முடிவெடுத்து வெளியே வந்து சாரதாவிடம் “ஆதி மாமாவுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லனு தான் நினைத்தேன், ஆனால் அவருக்கு என்னை பிடிக்கல, சரி அவர் ஆசைப்படுற மாதிரியே அவருக்கு கல்யாணம் நடக்கட்டும்” என்று சொல்லி நாடகம் போடுகிறாள். 


மறுபக்கம் நிச்சயம் முடிந்து முதல்முறையாக பாரதி ஆபிஸ் கிளம்பிச் செல்ல, ஆபிசில் யாரும் இல்லாமல் இருக்க குழப்பம் அடைகிறாள். பிறகு எல்லாரும் சேர்ந்து பாரதியை சர்ப்ரைஸ் செய்கின்றனர். ஆதியும் பாரதியும் ரூமுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி உட்கார்ந்திருக்க, அங்கு வரும் ஸ்வேதா அவர்களை டிஸ்பர்ப் செய்கிறாள். 


பிறகு பாரதிக்கு வாழ்த்து சொல்வது போல நாடகமாடுகிறாள். திடீரென பாரதி “இன்னைக்கு ஸ்கூலில் பேரண்ட் மீட்டிங் இருக்கு” என்று சொல்லிக் கிளம்ப, ஆதி அது பேரன்ட்ஸ் மீட்டிங் என்று அவளுடன் சேர்ந்து கிளம்ப ஸ்வேதா கடுப்பாகிறாள். ஸ்கூலுக்கு வந்த ஆதி தமிழைப் பற்றி பேச, ஆதி குழந்தையைப் பற்றி இவ்வளவு தெரிந்து வச்சிருக்காரா? என்று ஆச்சரியப்படுகிறாள்.  இப்படியான நிலையில் இந்த வார இதயம் சீரியல் நிறைவடைகிறது.