தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதிக்கும் பாரதிக்கும் நிச்சயம் செய்ய முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, ஆதி பாரதி மற்றும் தமிழ் பாப்பா என மூவரும் பேசிக் கொண்டிருக்கும்போது தமிழ் நிச்சயத்தின் போது எல்லாரும் மேட்சிங் மேட்சிங்கா ப்ளூ கலரில் இருக்கணும் என ஆசையை சொல்கிறாள். உடனே தமிழும் ஓகே சொல்கிறான். 


அதனைத் தொடர்ந்து நிச்சய புடவையை தெரிவு செய்வதற்காக பாரதியை சாரதா வீட்டிற்கு அழைக்க, பாரதி தமிழை கூட்டிக்கொண்டு வருகிறாள். புடவைக்காரர் புடவைகளை எடுத்து வந்து கொடுத்திருக்க, ஸ்வேதா ப்ளூகலரில் ஒரு புடவையை தேர்வு செய்ய பாரதிக்கு தமிழ் சொன்ன விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. 


இதனால் ஸ்வேதா எடுத்த புடவை தனக்கு வேண்டும் என்று வாங்கிக்கொள்ள ஸ்வேதா கடுப்பாகிறாள். அடுத்து ஆதி காரில் வந்து கொண்டிருக்கும் வழியில் ஒருவர் விபத்தில் சிக்கி விழுந்து கிடக்க, ஆதி அந்த நபரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய “பிரைன் டெட் ஆகிட்டாரு, உடனே உடலுறுப்பை மாற்ற வேண்டும்” என்று சொல்ல, ஆதிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த விஷயங்கள் தெரிய வருகிறது. 


தனக்கு இதயம் கொடுத்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும், அந்தக் குடும்பத்தை நேரில் பார்க்க வேண்டும் என முடிவெடுக்கிறான். இதே சிந்தனையில் ஆபீஸ் வர, பாரதி “என்னாச்சு டல்லா இருக்கீங்க என்று கேட்க ஆதி டாக்டரிடம் பேச வேண்டும் என்று போன் செய்கிறான். இப்படியான நிலையில் இன்றைய இதயம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.