தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி தான் ஆதியின் காதலி என கேசவ் உளற, சாரதா அவனது பளாரென அறைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


“ஆதியை பார்த்துக்கடானு உன்னை ஆபிஸ் அனுப்பி வச்சா நீயும் அவனோட சேர்ந்து உண்மையை மறைச்சிருக்க” என்று திட்டுகிறாள். அதோடு அந்த பாரதியும் என்கிட்ட நல்லவள் மாதிரி நடிச்சு இருக்கா” என்று கோபப்படுகிறாள். “எனக்கு இந்த விஷயம் தெரியும்னு ஆதிக்கு சொல்லக்கூடாது, அப்படி அவனுக்கு உண்மை தெரிந்தால் என்னை உயிரோடவே பார்க்க முடியாது” என கேசவ்விற்கு செக்மேட் வைக்கிறாள். 


அதனைத் தொடர்ந்து இங்கே பாரதி ஆதி சொன்ன வார்த்தைகளால் பதட்டத்தில் இருக்க, சாரதா போன் செய்வதைப் பார்த்து இன்னும் பதறுகிறாள். இருப்பினும் போனை எடுக்க யாருக்கும் தெரியாமல் யாரிடமும் சொல்லாமல் நான் சொல்லும் இடத்திற்கு வர சொல்கிறாள் சாரதா. பிறகு பாரதி சாரதாவை சந்திக்கச் செல்கிறாள். 


சாரதா பாரதியை கண்டபடி பேசி அவமானப்படுத்துகிறாள். “எக்காரணத்தை கொண்டும் நீ ஆதியோட வாழ்க்கையில் வரவே கூடாது, நானும் நீயும் பேசிய விஷயம் வெளியில் தெரியவும் கூடாது” என எச்சரித்து அனுப்ப, கண்ணீருடன் வீட்டிற்கு வருகிறாள். மரகதம் கூப்பிடுவதைக் கூட கவனிக்காமல் ரூமுக்கு வரும் பாரதி, வாசுவின் போட்டோ முன்பு நின்று “எல்லாரும் என்னை தப்பாவே நினைச்சிட்டு இருக்காங்க” என்று அழுகிறாள். 


தமிழ் வரைந்த குடும்ப போட்டோ பாரதி கண்ணில் பட அதையும் கிழித்து போட்டு கலங்குகிறாள். இப்படியான நிலையில் இன்றைய இதயம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Bhavatharini: ஆரா அமுதே! மகள் பவதாரிணிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இளையராஜா: நொறுங்கிப்போன பாரதிராஜா


Rajinikanth - Vijay: ”காக்கா - கழுகு கதை” அன்பை பரப்பச்சொன்ன ரஜினி - மீண்டும் விஜய் மீது வெறுப்பை உமிழும் ரசிகர்கள்..!