பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கோபியுடன் ராதிகா வீட்டுக்கு செல்லும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 


ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, . ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்த காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 


ராதிகா வீட்டுக்கு செல்லும் இனியா 


ஸ்கூல் முடிந்து கோபியுடன் காரில் செல்லும் இனியா, தன்னை எங்காவது கூட்டிச் செல்லுமாறு தெரிவிக்கிறார். ஆனால் இன்னொரு நாள் அழைத்து செல்கிறேன் என கோபி கூற, பக்கத்துல எங்கேயாவது போலாம் என இனியா அடம் பிடிக்கிறார். உடனே கோபி அம்மாவுக்கு போன் சொல்லி பேசுமாறும்,கடந்த முறை நடந்த மாதிரி நடக்க கூடாது எனவும் சொல்கிறார். இனியா கோபி போனில் இருந்து பாக்யாவுக்கு போன் செய்கிறார். முதலில் போனை எடுக்க மறுக்கும் பாக்யா, ஜெனியின் வற்புறுத்தலால் எடுத்து பேசுகிறார். தான் அப்பாவுடன் இருக்கும் தகவலை தெரிவித்து விட்டு இனியா போனை வைக்கிறார். 


கோபி இனியாவை ராதிகா வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கு ராதிகா,மயூ, அண்ணன் சந்துரு, அம்மா ஆகியோரை பார்த்ததும் இனியா எரிச்சலடைகிறார். அங்கிருந்து  உடனடியாக கிளம்ப வேண்டும் என சொல்கிறார். முதலில் 5 நிமிடம் இருந்து விட்டு செல்லலாம் என சொல்லும் கோபி, பின் இனியா வற்புறுத்ததால் கிளம்புகிறார். இனியாவின் வருகை ராதிகாவின் அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 


எழில் - அம்ரிதா சந்திப்பு 


படம் ட்ராப் ஆனதால் தயாரிப்பாளர் ஆபீஸில் இருந்து கிளம்பும் எழிலை அம்ரிதா சந்திக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் தயாரிப்பாளரின் மகள், எழிலின் நண்பன் சதீஷிடம் இதுகுறித்து கேட்கிறார். அவரோ, எழிலும் அம்ரிதாவும் காதலிக்கும் விஷயத்தை சொல்ல தயாரிப்பாளரின் மகள் அதிர்ச்சியடைகிறார். அடுத்ததாக எழில் தயாரிப்பாளரை சந்திக்கிறார்.  எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்து அறிமுகப்படுத்தியது நீங்கள் தான் உங்களுடன் வேலை செய்ய முடியாதது துரதிஷ்டவசமானது தான். அதுக்காக மன்னிப்பு கேட்கிறேன் என சொல்கிறார். பின் பாக்யா தனது சமையல் குழுவினருடன் கல்யாணத்தில் சமைக்க வேண்டியது பற்றி விளக்குவது போல இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.