இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மணிரத்னத்தின் ப்ளாஷ்பேக் பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது. அதில் அவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய அனுபங்களைப் பகிர்ந்துள்ளார். 


அவருடைய பேட்டியில் இருந்து..


ரஜினிகாந்த் ஒரு ஹ்யூஜ் ஸ்டார். அவருடைய ரியலிஸ்டிக் மோட் நடிப்பு வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதை நான் முள்ளும் மலரும் படத்தில் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து 75% ஆவது என் படத்தில் கொண்டுவர வேண்டும் என்றுதான் நான் தளபதி ஆரம்பிச்சேன். ரஜினிகாந்த் ஒரு ஓபன் பெர்சன். அவரிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்று சொன்னால் போதும். அதை அப்படியே தருவார். நான் சூர்யா இப்படித்தான் இருப்பார் என்றேன். அதை அப்படியே பிரதிபலித்தார். ரஜினிகாந்த் செட்டில் ரொம்பவே ஒத்துழைப்பு தருவார். அவரைப் போல மம்முடியும் அதே குணம் கொண்டவர் தான். எனக்கு அந்தப் படத்தில் ரெண்டு ஹ்யூஜ் ஸ்டார்ஸ் கூட வேலை பார்க்கிறோம் என்று தோன்றவே இல்லை. என்னை அவ்வளவு ஈஸியாக ஃபீல் பண்ண வைத்தார்கள். நான் தளபதிக்காக ரெண்டு க்ளைமாக்ஸ் எடுத்தேன் என்பதெல்லாம் புரளி. நான் எந்தப் படத்திற்கும் ஆல்டர்நேட் முடிவு யோசித்ததே இல்லை.


எனக்கு எல்லா படமும் முதல் படம் தான். ஒவ்வொரு படமும் ஒரு ஸ்ட்ரகிள் தான் நமக்கு பிடித்ததும் நம்முடன் தான் இருக்கும். பிடிக்காததும் நம்முடன் தான் இருக்கும். அதை எல்லாவற்றையும் வைத்து தான் நாம் சாதிக்க வேண்டும். ஒரு ஸ்க்ரிப்டுக்கு உயிர் கொடுப்பது தான் என் வேலை. மணி சாரின் படம் என்று எது வித்தியாசப்படுத்துகிறது என்று கேட்டீர்கள் என்றால், நடிகர்களும், நடிகைகளும் அன்றாடம் சூட்டிங் போகிறார்கள். ஒரு செட் மாறி இன்னொரு செட். ஆனால் என் செட்டில் எக்ஸ்ட்ரா வேண்டுமென்றால் நான் அதற்காக நிறைய எக்ஸ்ட்ரா இன்புட்ஸ் போட வேண்டும். அதுதான் அந்த டைரக்டோரியல் டச் என்று கூறலாம்.


இவ்வாறு அந்தப் பேட்டியில் மணிரத்னம் கூறியிருக்கிறார். பொன்னியின் செல்வனில் நடிக்க வாய்ப்பு கேட்டதாக ரஜினியே வெளிப்படையாகக் கூறிய நிலையில் மணிரத்னத்தின் ரஜினி பற்றிய இந்தப் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.


தமிழ்த் திரையுலகின் நீண்ட கால பிரயத்தனம்..


தமிழ்த் திரையுலகில் எம்ஜிஆர் தொடக்கிப் பல முன்னணி இயக்குநர்கள் படமாக நான், நீ என்று போட்டி போட்டனர். ஆனால் அது கடைசி வரை கனவாக மட்டுமே இருந்தது. இதனையடுத்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலை, படமாக்கும் வேலையை இயக்குநர் மணிரத்னம் கையில் எடுத்தார். இரண்டு பாகங்களாக உருவாகும்  இந்த படத்தை லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.


மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்ட  பொருட்செலவில்  உருவான பொன்னியின் செல்வன் மெகா ஹிட் அடித்துள்ளது. மணிரத்னம் ஜீன் மாதம் 2ஆம் திகதி 1956களில் கோபால ரத்தினம் என்பருக்கு மகனாக பிறந்தார். இவரது குடும்பத்தில் காணப்படுவர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் சினிமாவில் பிரபலமாக காணப்பட்டார்கள். உதாரணமாக இவரது மாமா, 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி - படத்தயாரிப்பாளர், ஜி.வெங்கடேஸ்வரன் - படத்தயாரிப்பாளர், ஜி.சீனிவாசன் இணைத்தயாரிப்பாளர் போன்றவர்களை கூறலாம். இவரது குடும்பம் திரைக்குடும்பமாக இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க கூட அனுமதி இல்லாமல் இருந்தது. இவரது குடும்பத்தில் உள்ளவர்கள் திரைப்படம் பார்ப்பதை தீயப்பழக்கமாக கருதியுள்ளார்கள்.


அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன்' என, அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும், வளர்ந்த சிறுவனாக திரைப்படம் பார்க்கத் துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும், நாகேஷும் இவருக்குப் பிடித்த நடிகர்களாவர் இயக்குனர் பாலச்சந்தர் படங்களைப் பார்த்து அவரது ரசிகராக மாறியுள்ளார்.பின்பு பள்ளிப் படிப்பு முடிந்து, ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில், வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார். பின்னர் சிறிதுகாலம் தன் துறை சார்ந்த வேலை பார்த்தவர் திரைப்படங்களில் ஆர்வம் காட்டினார். இன்று உலகம் வியக்கும் இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.