சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மே 14) எபிசோடில் ஜனனி முதல் நாள் வேலைக்கு கிளம்ப தயாராகி வருகிறாள். அனைவரும் அவளுக்கு வாழ்த்துக்களை சொல்ல ஞானம் மற்றும் ரேணுகாவை அழைத்து ஆசீர்வாதம் வாங்குகிறாள். அதை பார்த்த விசாலாட்சி அம்மா கேலியும் கிண்டலுமாக அனைவரையும் அவமானப்படுத்தி பேசுகிறார்.






அந்த நேரத்தில் கரிகாலன் கூட்டாளியுடன் கம்பீரமாக வீட்டுக்குள் வருகிறான். அவனை பார்த்ததும் கதிர், சக்தி மற்றும் ஞானம் மூவரும் எகிறி போய் அடிக்கிறார்கள். கரிகாலன் தான் செய்ததை நியாயப்படுத்தி பேசுகிறான். "ஞானம் மாமா கொடுத்த பணத்தை தொழிலதிபர் ஒருவரிடம் கொடுத்து ஞானத்தை பேசவைத்தேன். அவர் கொடுத்த சரக்கை தான் கைமாத்திவிட்டேன். அதை வைத்து பிழைத்து கொள்ள தெரியவில்லை என்றால் அதற்கு நானா காரணம். உங்க பொண்டாட்டிகள் சொல்வது போல நீங்கள் எல்லோரும் முட்டாள்கள் தான்" என கரிகாலன் சொல்ல மீண்டும் அவன் மீது கதிர் எகிறுகிறான்.

"நான் தான் அவனை வரச் சொன்னேன்" என குணசேகரன் சொல்ல "எங்களை ஏமாற்றினவனுக்கு இந்த வீட்டுக்குள் என்ன வேலை?" என சக்தி எகிற "அப்படி இந்த வீட்ல ஏமாத்தினவங்க இருக்க கூடாதுன்னா நீங்க எல்லாரும் தான் முதல இந்த வீட்டை விட்டு போகணும். அவன் என்னோட ஆளு. அவன் இங்க தான் இருப்பான். என் மேல விஸ்வாசமா இருப்பான்" என கரிகாலனுக்கு சப்போர்ட்டாக பேசி மாடிக்கு அழைத்து செல்கிறார்.


 





ஜனனி ஆபீசுக்கு சென்று எம்.டியை சந்திக்க காத்திருக்கிறாள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


 


 




கரிகாலன் குணசேகரனுடன் கிளப்ப தயாராகிறான். அவனது கூட்டாளியை வேகமாக கிளம்ப சொல்லி சொல்கிறான். அவர்கள் பேசிக்கொள்வதை கீழே இருக்கும் கதிர் மற்றும் சக்தி கேட்டுவிடுகிறார்கள். "இன்னும் அரை மணி நேரத்தில் அவன் இங்க இருந்து கிளம்பல அவனை மேல அனுபுறேனா இல்லையான்னு பாரு" என கதிர் ஆவேசமாக சக்தியிடம் சொல்லி கொண்டு இருக்க அதை கீழே இறங்கி வரும் கரிகாலன் கேட்டுவிட்டு சிரிக்கிறான்.


 




நந்தினி ஜனனிக்கு போன் செய்து ஆபீஸ் எப்படி இருக்கிறது என்பது பற்றி ஸ்பீக்கரில் போட்டு விசாரிக்கிறாள்.  "வீட்ல Mr . குணசேகரன் இருக்காருல அவர் மாதிரியே இங்க ஒருத்தர் இருக்காரு" என ஜனனி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே கீழே இறங்கி வந்த குணசேகரன் அதை கேட்டுவிட்டு "எல்லா இடத்திலேயும் ஒரு குணசேகரன் இருப்பான்" என நக்கலடிக்கிறார். யாரு என புரியாமல் ஜனனி கேட்க "இது வீட்ல இருக்க ரியல் குணசேகரன் மாமா" என கரிகாலன் பதில் சொல்கிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.