சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மே 13) எபிசோடில் நந்தினியின் அப்பாவை குணசேகரனும், விசாலாட்சி அம்மாவும் சேர்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள். நந்தினியின் அப்பா மிகவும் மனது வேதனைப்பட்டு மொய் விருந்து செய்வதற்கான காரணம் பற்றி சொல்கிறார். நந்தினி அப்பாவை வலுக்கட்டாயமாக கீழே இழுத்து வந்து மீனாட்சி படத்தின் முன்னாடி பத்திரிகையை வைத்து முதல் பத்திரிகையை ஞானத்திடம் கொடுத்து அழைக்கிறாள். ஞானம் அதை நினைத்து கண்கலங்குகிறான். ஞானம் நந்தினிக்கு செய்ய தன்னிடம் எதுவும் இல்லாமல் பிச்சைக்காரன் போல இருக்கிறேன் என சொல்லி சக்தியிடம் வருத்தப்பட்டு பேசுகிறான். அதை கேட்டு ரேணுகாவும் அழுகிறாள். "பணம் இல்லைனா என்ன? நாம எல்லாரும் ஒத்துமையா இருந்தா அதுவே சந்தோஷம்" என ஞானத்தை சமாதானப்படுத்துகிறான் சக்தி.
ஜனனிக்கு வேலை கிடைத்ததை பற்றி அனைவரிடமும் சொல்ல அனைவரும் வாழ்த்து கூறுகிறார்கள். அனைவரும் ஜனனி வேலைக்கு போவதை பற்றி சந்தோஷமாக பேசி சிரிக்கிறார்கள். அந்த நேரத்தில் விசாலாட்சி அம்மா வந்து கதிர், சக்தி, ஞானம் என மூவரையும் அழைத்து சென்று குணசேகரனிடம் சமாதானமாக பேசி காதுகுத்து விழாவுக்கு அழைக்க அழைத்து செல்கிறார். என்ன விஷயம் என குணசேகரன் கேட்க "எனக்கு இதுங்க மேல எல்லாம் எனக்கும் கரிசனம் கிடையாது. தம்பி மகளுக்கு நடக்குற இந்த விழா பத்திரிகையில் உன்னுடைய பெயர் இல்லைனா நல்லா இருக்காது" என சந்தனம் பேசுகிறார் விசாலாட்சி அம்மா. ஆனால் குணசேகரனோ அனைவரையும் தூக்கி எறிந்து பேசுகிறார். கதிரை ஏத்திவிட்டு அவமானப்படுத்துகிறார். "உங்க அம்மா தான் கூட்டிட்டு வந்தாங்க. நான் உங்ககிட்ட எதையும் எதிர்பார்க்கவில்லை" என்கிறாள் ஜனனி. அடுத்த டார்கெட் ஞானம் பக்கம் திரும்ப " உங்க எல்லாருக்கும் நான் தான் கரிகாலனை ஏத்தி விட்டு ஏமாத்தினேன் என நினைக்கிறீங்க என கேள்விப்பட்டேன். இந்த மொய் விருந்தில் மட்டும் பணத்தை வசூல் செய்து காட்டுங்க" என சவால் விடுகிறார் குணசேகரன். ஜனனி அடுத்த நாள் வேலையில் சேர்வது பற்றி சக்தியும் ஜனனியும் பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது சக்தி நானும் வேலையில் சேர போகிறேன் என சொல்கிறான். இருவரும் ரொமான்டிக்காக பேசிக்கொள்கிறார்கள். இது தான் நேற்றைய எபிசோட் கதைக்களம். அதன் தொடர்ச்சியாக இன்றைய (மே 14 ) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.