சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி குணசேகரனிடம் விவாகரத்து பற்றிப் பேச கொந்தளித்த குணசேகரன், இது அனைத்துக்கும் ஜனனி தான் காரணம் என அவள் மீது எகிறுகிறார். தர்ஷனை ஈஸ்வரிக்கு எதிராக ஏத்தி விடுகிறார்.
"உன்னோட பிளான் என்ன என எனக்குத் தெரியும். தர்ஷினியை ஜீவனாந்ததோட அனுப்பிவிட்ட இப்போ நீ போய் அந்த ஆளோட சேரப் போற.. அப்படித்தானே?" என தர்ஷன் அநியாயமாகப் பேச, ஈஸ்வரி தர்ஷனை ஓங்கி அறைகிறாள். "குணசேகரன் வீட்டு பொம்பளைங்க அத்துகிட்டு போக முடியாது, பொணமாக வேணுன்னா போகலாம்" என கர்வமாகப் பேசுகிறார் குணசேகரன்.
நந்தினி சென்று கதிரிடம் சமாதானமாகப் பேச கதிர் எகிறுகிறான். தாரா கதிருக்கு புத்தி வருவது போல அறிவுரை சொல்ல, கதிர் சமாதானம் அடைகிறான். கதிர் சத்தமாக பேசியதைக் கேட்டு ஜனனி, ஈஸ்வரி, சக்தி என அனைவரும் ரூமுக்கு வந்து பார்க்க, தாரா நடந்ததைச் சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டு குணசேகரன் ஆத்திரம் அடைகிறார்.
ஜனனிக்கு இரண்டு நாளில் வேலையில் சேர ஆர்டர் வந்திருப்பதைப் பற்றி சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். ஈஸ்வரி வீட்டுக்கு பெண் வழக்கறிஞர் ஒருவரை விவாகரத்து விஷயமாகப் பேச அழைத்து வந்திருக்கிறார். ஈஸ்வரி விவாகரத்து கேட்டு நீங்கள் அதைத் தர முடியாது என சொல்ல முடியாது என பெண் வழக்கறிஞர் சொல்ல, குணசேகரன் ஈஸ்வரியை முறைக்கிறார். இதுதான் நேற்றைய எதிர்நீச்சல் கதைக்களம்.
அதைத் தொடர்ந்து இன்றைய (மே 11) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வழக்கறிஞரை வழியனுப்பி வைத்த ஈஸ்வரி வெளியே நின்று கொண்டிருந்த சக்தி, ஜனனி மற்றும் நந்தினியிடம் வந்து "காச வைச்சு நம்ம எல்லாரையும் ஆட்டிப் படைக்கணும் என நினைக்குறாரு. இத அவ்வளவு சாதாரணமா நான் விட்டுவிட மாட்டேன்" என ஈஸ்வரி சபதமிடுகிறாள்.
தாராவுக்கு காதுகுத்து விழா ஏற்பாடு செய்வதற்காக பத்திரிகையில் கதிரின் அப்பா, அம்மா பெயரைப் போட வேண்டும் என்பதற்காக குணசேகரன் வீட்டுக்கு வருகிறார் நந்தினியின் அப்பா. "பத்திரிகையில் அவங்க அப்பா பெயரையும் அம்மா பெயரையும் போட வேண்டாமா?" என குணசேகரனிடம் நந்தினி அப்பா கேட்க, “அதுக்கு எதுக்கு இவர்கிட்ட கேட்கணும்? இந்த ஆள் உத்தரவை வாங்கி எங்க அப்பா பெயரை போடணும் என எந்த அவசியமும் இல்லை" என கதிர் முறைப்பாக சொல்ல, கதிரை தூக்கி எரிந்துப் பேசுகிறார் விசாலாட்சி அம்மா.