Ethirneechal Written Update : சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. சின்னத்திரை ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றான 'கோலங்கள்' சீரியல் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரின் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியல் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.






சின்னத்திரை ரசிகர்களின் அபிமான தொடரான எதிர்நீச்சல் தொடர் பெண்களை அடிமையாக வைத்து இருக்கும் ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தை சுற்றியும் உருவாக்கப்பட்டது. அந்த வலைக்குள் இருந்து பெண்கள் எப்படி முன்னேறி வெளியே வருகிறார்கள் என்பது தான் எதிர்நீச்சல் சீரியலின் கதைக்களம். ஆதி குணசேகரன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மாரிமுத்துவின் மரணத்துக்கு பிறகு அந்த கேரக்டரில் என்ட்ரி கொடுத்த வேல ராமமூர்த்தி வந்த பிறகு எதிர்நீச்சல் சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் சற்று சரிய துவங்கியது. இதனால் அதிருப்தி அடைந்தனர் எதிர்நீச்சல் ரசிகர்கள்.


அதனால் இந்த சீரியலை முடிக்க சேனல் தரப்பு திட்டமிட்டது. அதன்படி இறுதிப்பகுதி வாரம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.



 

அதில் குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவருக்கு எதிராக சாட்சி சொல்வதற்காக கிள்ளிவளவன் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடக்கையில் "குணசேகரன் சொல்லி தான் நான் அந்த ஜீவானந்தம் பொண்டாட்டியை சுட்டு கொன்னேன்" என்கிறார். பின்னர் கதிரை பற்றி கிள்ளிவளவன் நீதிபதியிடம் சொல்லவும், குணசேகரன் குறுக்கிட்டு "நான் சொல்லி தான் நீ செஞ்ச என ஒத்துக்கிட்ட இல்ல அத்தோட நிறுத்துடா. தேவையில்லாம என்னோட தம்பியை இழுக்காத ஆமா" என்கிறார். 

 


 

கதிர் குணசேகரனை பரிதாபமாக பார்க்கிறான். சாருபாலாதான் இந்த வழக்கில் குணசேகரனுக்கு எதிராக ஆஜராகி இருக்கும் வக்கீல். அவர் நீதிபதியிடம் குணசேகரன் மனைவி ஈஸ்வரியை விசாரிக்க அனுமதி கேட்கிறார். ஈஸ்வரி வந்து விசாரணைக்கு நிற்க குணசேகரன் அவளை தீப்பொறி பறக்க முறைக்கிறார். ஆனால் ஈஸ்வரி துணிச்சலுடன் கம்பீரமாக வந்து நிற்கிறாள். அனைவரும் என்ன நடக்கும்? தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்பதை பதட்டத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான கதைக்களம்.