சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினியின் நிச்சயதார்த்த வேலைகளை வேகவேகமாக செய்து வருகிறார்கள் குணசேகரன் மற்றும் சித்தார்த். அந்த வகையில் இன்றைய (ஏப்ரல் 5 ) எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

 

கோயிலில் அனைவரும் சித்தார்த்துக்கு காத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி இருவரும் காவடியை தூக்கிக்கொண்டு சாமியாடி வருவதுபோல நடிக்கிறார்கள். அவர்களை பார்த்ததும் குணசேகரன் டென்ஷனாகிறார். 

 

ஜான்சி ராணி வந்து குணசேகரனை வம்பிழுக்க "மரியாதையா இரண்டு பேரும் வெளியே போயிருங்க" என குணசேகரன் மிரட்ட "ஏன் யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா ஏதாவது காரியம் பண்ண போறியா?" என ஜானகி ராணியும் பதிலுக்கு நக்கலாக பேசுகிறாள். தர்ஷினி அவர்களை கண்டு அலறுகிறாள். 

 

 


சக்தி காரில் எங்கோ சித்தார்த்துடன் போய்கொண்டு இருக்கிறான்.  கதிர் சக்திக்கு போன் செய்து "அந்த பையன் நம்ம கிட்ட இருக்குற வரைக்கும் தான் அந்த பொம்பளைய நம்ம வழிக்கு கொண்டு வர முடியும். ஜனனி விஷயத்தை நான் பாத்துக்குறேன்" என சொல்கிறான் கதிர். 

 

ஜனனியை நான்கு ரவுடிகள் கடத்தி கொண்டு செல்கிறார்கள். "எங்க அம்மாவும் அஞ்சனாவும் எங்க? " என ஜனனி அவர்களிடம் கேட்க "முதல சித்தார்த் எங்கன்னு நீ சொல்லு" என மிரட்டுகிறான் ஒரு ரவுடி. அதை கேட்டு ஜனனிக்கு ஒன்றும் புரியாமல் சித்தார்த்தா? என கேட்க அவளை அனைவரும் சேர்ந்து அடிக்கிறார்கள். அப்போது அங்கே கார் ஒன்று வந்து நிற்கிறது. அந்த காரில் வந்தவர்களை பார்த்து ரவுடிகள் டென்ஷனாகிறார்கள். காரில் வந்து இறங்கியது யார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.  இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 

 


நேற்றைய கதைக்களத்தில் கரிகாலன் வந்து குணசேகரன் சென்ற காரை வழிமறிக்கிறான். வாயில் அரிவாளுடன் ஆவேசமாக இருந்த கரிகாலனை இடித்து தள்ளி விட்டு காரை வேகமாக ஓட்ட சொல்கிறார் குணசேகரன். 

 

 ஜனனியை காணவில்லை என டென்ஷனாக இருந்த சக்தியை கதிர் சமாதான படுத்துகிறான். அந்த சித்தார்த்தை கதிர் கடத்தி வைத்திருப்பது பற்றி சக்தியிடம் சொல்கிறான். ஜனனியை விட்டால் தான் உன் மகன் உனக்கு கிடைப்பான் என சொல்ல சொல்கிறான் சக்தி. ஆனால் கதிர் வேறு ஏதோ பெரிய பிளான் வைத்திருப்பதாக சொல்கிறான். சித்தார்த் பற்றி இதுவரையில் எந்த தகவலும் கிடைக்காமல் பதற்றத்தில் இருக்கிறாள் உமையாள். மகன் காணாமல் போன விஷயத்தை பற்றி குணசேகரனிடம் அப்படியே மூடி மறைகிறாள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)எபிசோடில் ஒளிபரப்பானது.