சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரனை தேடி வந்த ஞானத்தையும் கதிரையும் அந்த சாமியார் ஒரு கோயிலுக்கு அழைத்து சென்று இங்க உட்காருங்கள் உங்கள் அண்ணன் வருவார் என கூறுகிறார். கடுப்பான கதிர் "நீ யாரு? எங்க அண்ணனை எப்படி உனக்கு தெரியும்? மரியாதையா சொல்லிடு" என மிரட்டுகிறான்.
குணசேகரனை தேடிய பயணம்:
"உங்க அண்ணன் மனசு ரொம்ப சங்கடப்பட்டு வந்து இருக்கார். அவரை சமாதானம் செய்து கூட்டி வருகிறேன்" என சொல்லிவிட்டு செல்கிறார் சாமியார். அப்போது கதிருக்கு கிறக்கமாக இருக்கிறது என சொல்ல ஞானம் சென்று தண்ணீர் கொடுக்கிறான். கதிர் அண்ணனை நினைத்து கண்கலங்கி பேசுகிறான். ரொம்ப நேரமாக அதே இடத்தில் காத்து கொண்டு இருக்கிறார்கள். சாமியாரையும் வரவில்லை, குணசேகரனும் வரவில்லை.
வீட்டில் ஆதிரை விசாலாட்சி அம்மாவுக்கு காலுக்கு தைலம் தேய்த்து விட்டு கொண்டி இருக்கிறாள். அப்போது கரிகாலன் வந்து வெண்பா, ஈஸ்வரியை அம்மா அம்மா என கூப்பிடுகிறது என போட்டு கொடுக்கிறான். ஈஸ்வரியை அழைத்து வரச் சொல்கிறார் விசாலாட்சி அம்மா. "அந்த பிள்ளை ஏண்டி உன்ன அம்மானு கூப்பிடுது. ஆண்ட்டி, அத்தை அப்படினு கூப்பிட வேண்டியதுதானே. ஏன் அம்மானு கூப்பிடனும். ஊருக்கு போன சொந்தக்காரங்க வீட்ல விடணும். இங்க என்ன ப்ரெண்ட் வீட்டில விட்டுட்டு போயிருக்கா. அவ அம்மாவுக்கு போன் பண்ணிக்குடு நான் கேட்குறேன்" என ஈஸ்வரியை கேட்கிறார்.
"இந்த பேச்சை இத்தோட நிறுத்துங்க. அவர் ராத்திரி யாருக்கும் சொல்லிக்காம வீட்டை விட்டு போனா நாங்க என்ன பண்ண முடியும். இது என்னோட தனிப்பட்ட சுதந்திரம். உங்களுக்கு இந்த பொண்ண இந்த வீட்டில் வைச்சுக்கறது பிடிக்கலைன்னா நான் ஒரு வாரம் எங்க அப்பா வீட்ல கூட்டிட்டு போய் வைச்சுக்குறேன். இந்த வீட்ல உங்களுக்கு இருக்க எல்லா உரிமையும் எனக்கும் இருக்கு. நான் தப்பா எதுவும் செய்யல செய்யவும் மாட்டேன். இந்த பேச்சை இத்தோடு நிறுத்திக்கங்க" என சொல்லிவிட்டு சென்று விடுகிறாள் ஈஸ்வரி.
சாமியார் குணசேகரனை அழைத்து வந்து விட்டார். காரிலிருந்து குணசேகரன் இறங்குவது போல காட்டுகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது :
இருட்டும் வரையில் கோயிலிலேயே கதிரும் ஞானமும் காத்திருக்கிறார்கள். இருவரும் கோயில் மண்டபத்திலேயே தூக்கிவிட்டனர். அப்போது குணசேகரன் வந்து அவர்களை பார்த்துவிட்டு சென்று விடுகிறார். அவர்கள் எழுந்ததும் சாமியாரை பார்த்து "அண்ணன் எங்கய்யா?" என கேட்கிறான் கதிர். "நான் சொன்னதை நம்பலையா? அங்க பாருங்க ஆதாரம்" என எதையோ காண்பிக்கிறார் சாமியார். அதை பார்த்து ஞானமும் கதிரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
வீட்டில் நந்தினி அடுத்த நாள் கேட்டரிங் ஆர்டருக்காக சாப்பாடு தயார் செய்து எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள் நந்தினி. அப்போது ஞானமும் கதிரும் வீட்டுக்கு வந்து இறங்குகிறார்கள். நந்தினி அவர்களை பார்த்து ஷாக்காகிறாள். கிச்சனுக்கு சென்ற "கதிர் எங்கடி போகுது இந்த சோறு எல்லாம்?" என மிரட்டுகிறான். என்ன சொல்வது என புரியாமல் நந்தினி திருதிருவென முழித்துக்கொண்டே"அது வந்து" என இழுக்கிறாள். அப்போது விசாலாட்சி அம்மா " நான் சொல்றேன் பா" என்கிறார். அதை கேட்டதும் ஈஸ்வரி ரேணுகா நந்தினி மூவரும் அதிர்ச்சியடைகிறார்கள். ஈஸ்வரி தலையில் அடித்து கொள்கிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
குணசேகரனாக புதிதாக என்ட்ரி கொடுத்து இருப்பவர் யார் என இன்று தெரிந்து விடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.