சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினி, ஈஸ்வரியிடம் நேத்து குணசேகரன் ஏதாவது கடுமையாக பேசினாரா என கேட்கிறாள். அதற்கு ஈஸ்வரி "நான் அவரை பார்க்கவே இல்லை" என சொல்லவும் அப்போ "இன்னிக்கு ஒரு ட்ராமா இருக்கு" என்கிறாள் நந்தினி.
ஈஸ்வரி கதிருக்கும், ஞானத்திற்கும் காபி கொண்டு போய் கொடுக்க விசாலாட்சி அம்மா நேத்து நடந்த பிரச்சினை பற்றி கேட்டு "உன்னோட பிள்ளையை நீ கண்டிக்கமாட்டியா. போய் இரண்டு பேரும் பெரியவன் கிட்ட போய் மன்னிப்பு கேட்டுட்டு வாங்க" என சொல்கிறார் விசாலாட்சி அம்மா.
ஈஸ்வரி குணசேகரனுக்கு காபி எடுத்து கொண்டு ரூமுக்கு போகிறாள் ஆனால் அவர் அங்கு இல்லை. எல்லா இடத்திலேயும் சுத்திப்பார்த்தாலும் குணசேகரன் வீட்டில் இல்லை. கதிர், கரிகாலன், ஞானம் என அனைவரிடமும் விசாலாட்சி அம்மா குணசேகரன் பற்றி விசாரிக்கிறார் ஆனால் யாருமே நான் பார்க்கவில்லை என்கிறார்கள். வீடு, தோட்டம் என எல்லா இடத்திலும் தேடுகிறார்கள் ஆனால் குணசேகரனை காணவில்லை.
வீட்டில் உள்ள அனைவரும் பதட்டமாக இருக்கிறார்கள். விசாலாட்சி அம்மா சக்தியிடம் "அண்ணனை பாத்தியா?" என கேட்கிறார் "இல்ல அம்மா மேல நான் பாக்கலையே" என்கிறான் சக்தி. ஞானம் "எல்லா இடத்திலேயும் பார்த்துட்டேன் அவர் இல்ல" என்கிறான். சரி அவருக்கு போன் செய்து பார்க்கலாம் என போன் செய்தால் மாடியில் தான் போன் அடிக்கிறது. ஞானம் மாடிக்கு பார்க்க சென்றால் அங்கே போனுக்கு அடியில் லெட்டர் ஒன்றை எழுதி வைத்துள்ளார் குணசேகரன். அதை படித்து பார்த்து அழுகிறான் ஞானம். "டேய் கதிர், சக்தி வாடா டேய்" என அழுதுகொண்டே அழைக்கிறான். அனைவரும் பதட்டத்துடன் மாடிக்கு ஓடி வருகிறார்கள்.
சக்தி லெட்டரை படிக்கிறான் "என்னுடைய கடமையை முடித்து விட்டேன். எனது மனைவி ஒழுக்கமானவள் என நினைத்தேன். அவள் நடத்தைகெட்டவள், என் குழந்தை என் கையை விட்டு சென்றுவிட்டனர். என்னுடைய அம்மாவும் என்னை ஏமாற்றிவிட்டார். கதிருக்கும், ஞானத்திற்கும் எனது கடைசி வாழ்த்துக்கள்" என எழுதி வைத்துள்ளார் குணசேகரன்.
முதலில் தேடி பார்க்கலாம் என சொல்லி அவருக்கு தெரிந்தவர் அனைவருக்கும் போன் செய்து பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் அங்கு குணசேகரன் வரவில்லை என சொல்லி விடுகிறார்கள். ஞானம் ஆடிட்டருக்கு போன் செய்ய சொல்கிறான். ஆடிட்டர் "நேத்து நைட் தான் போன் செய்து எல்லாத்தையும் தம்பிங்க கிட்ட ஒப்படைச்சுடுங்க என சொன்னார். நான் அங்க தான் வந்துகிட்டு இருக்கேன்" என சொல்லி போனை வைத்து விடுகிறார். கதிர் ஈஸ்வரியிடம் சண்டையிட்டு தர்ஷனை உடனே இங்க வரச்சொல்லுங்க என கத்துகிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.