விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் இன்றைய எபிசோடில் கோபி பாரில் நன்றாக குடித்து விட்டு போதையில் அங்கிருந்த அனைவரிடமும், என்னுடைய வீட்டை என்கிட்டே இருந்து பிடுங்கி என்னையும் என்னுடைய குடும்பத்தையும் பிரித்த அந்த பாக்கியாவை நான் பழிவாங்காமல் விட மாட்டேன் என உளறி கொண்டு இருக்கிறார். 




போதையில் காரை நேரடியாக பாக்கியாவின் வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து நிறுத்தி பாக்கியலட்சுமி என்ற நேம் போர்டை பார்த்து புலம்பி கொண்டு இருக்கிறார். தன்னுடைய வீடு எது என்பது கூட தெரியாமல் தள்ளாடிய கோபி ராதிகா வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அழுத்த ராதிகாவின் அம்மா வந்து கதவை திறக்கிறார். அய்யய்யோ சாரி மா தெரியாம நான் வீடு மாறி வந்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க, தயவு செய்து கத்தாதீங்க என ராதிகாவின் அம்மாவை அடையாளம் தெரியாமல் வெளியே செல்கிறார். ராதிகா அங்கே வந்து கோபியை உள்ளே அழைத்து செல்கிறாள்.


மறுநாள் காலை ஈஸ்வரி காசிக்கு செல்வதற்கு தயாராகிவிட்டார். வீட்டில் உள்ள அனைவரையும் பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு ராமமூர்த்தியை தேடுகிறார். அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என சொல்லிவிட்டு சென்றார் இன்னும் வரவில்லை. என் மீது அவருக்கு அக்கறை இல்லை என புலம்பி கொண்டு இருக்கையில் ராமமூர்த்தி புத்தகம் மற்றும் ஸ்நாக்ஸ் உடன் வருகிறார். ஒரு வாரம் இதை வைச்சு சாப்பிட்டுக்க என கொடுக்கிறார். எல்லோரும் ஈஸ்வரியை வழி அனுப்பி வைக்கிறார்கள். 



கோபி தலைவலியுடன் எழுந்ததும் ராதிகா வந்து காபி தரட்டுமா கோபி என கேட்டுவிட்டு, "நீங்க குடிச்சிட்டு வருவீங்க நான் உங்களுக்கு காபி போட்டு தரணுமா" என சத்தம் போடுகிறாள். "கிளம்பும் போதே குடித்து விட்டு வராதீங்க... அம்மா இருக்குறாங்க என படிச்சு படிச்சு சொன்னேன், ஆனால் நன்றாக குடித்து விட்டு அம்மாகிட்டயே போய் பிரச்சனை பண்றீங்க" என ராதிகா சண்டை போடுவதை கேட்ட அவளின் அம்மா வெளியில் அழைத்து "அவரை கொஞ்சம் கொஞ்சமாக தான் விட்டு பிடிக்க வேண்டும்" என அறிவுரை கூறுகிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.