Ethirneechal: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல் ஜனனி - ஈ.சி.ஆரில் நடந்தது என்ன?

எதிர்நீச்சல் தொடரில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சன் டிவியின் மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இந்த சீரியலை 'கோலங்கள்' புகழ் இயக்குநர் திருச்செல்வம் இயக்கி நடித்து வருகிறார்.

Continues below advertisement

மதுபோதையில் எதிர்நீச்சல் ஜனனி:

இந்த சீரியலில் ஜனனி என்ற லீட் கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதா கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தனது ஆண் நண்பருடன் மது அருந்திவிட்டு கார் ஒட்டி விபத்து ஏற்படுத்திய விவகாரம் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

 

போலீஸ்காரருக்கு இடி:

வார இறுதி நாட்கள் என்றாலே கிழக்கு கடற்கரை சாலையில் ஏகப்பட்ட விபத்துகள் நடைபெறும். இந்த விபத்தை ஏற்படுத்துவதில் சில பிரபலங்களும் அடங்குவார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ராத்திரி கிழக்கு கடற்கரை சாலையில் அதுவும் ஒரு வழி சாலையில், மிகவும் வேகமாக காரை ஒட்டி வந்ததோடு மட்டும் அல்லாமல் எதிரில் பைக்கில் வந்து கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் மீது இடித்து அவரை கீழே தள்ளியுள்ளார் 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகை மதுமிதா. இதனால் அந்த போலீஸ்காரருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

போலீஸ் விசாரணை:

விபத்து நடந்த இடத்திற்கு கொஞ்ச நேரத்திலேயே போலீஸ் விரைந்து சென்று விபத்து ஏற்படுத்திய மதுமிதாவிடம் கேட்டதற்கு நாங்கள் சரியாக தான் வந்தோம், எதிரில் வந்த போலீஸ்காரர் தான் வேகமாக வந்து எங்களின் கார் மீது மோதினார் என பதில் அளித்துள்ளனர் நடிகை மதுமிதா தரப்பினர். காரில் மதுமிதாவுடன் அவரின் ஆண் நண்பர் ஒருவரும் இருந்துள்ளார். அவர்கள் இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தி அவர்கள் ஒட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த கார் விபத்து குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் மதிமிதாவுடன் காரில் வந்த அந்த ஆண் நண்பர் கேரளாவை சேர்ந்தவர் என்பதும் அவர் சென்னையில் உள்ள பிரபலமான  ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

 

 

கடந்த ஆண்டு தான் மதுமிதா புதிய கார் ஒன்றை வாங்கினார். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை கூட சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து மதுமிதா கூறுகையில் அது  ரொம்ப சின்ன ஆக்சிடென்ட் தான். என்னோட ப்ரெண்ட் தான் பண்ணிட்டான். அதை பற்றி பேச வேறு எதுவும் பெருசாக இல்லை என சொல்லி முடித்துவிட்டாராம் மதுமிதா. அவரின் இந்த அசால்ட்டாக பதில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, 

 

Continues below advertisement