எதிர்நீச்சல் சீரியலில் வரும் குணசேகரன் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்க,  ஆதிரை, கதிர் ஆகியோர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 


சன் டிவியில் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இயக்குநர் திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியல் தான் டிஆர்பியில் நம்பர் ஒன்றாக உள்ளது. பொதுவாகவே சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று வயது வித்தியாசம் இல்லாத தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், எதிர்நீச்சலுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர் பட்டாளம் உள்ளது. 


இந்த சீரியலில் இயக்குநர் மாரிமுத்து, நடிகைகள் பாம்பே ஞானம், மதுமிதா, கனிகா, தேவதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், கமலேஷ் , சத்யா தேவராஜன், சத்யப்ரியா, காயத்திரி கிருஷ்ணன், ராதிகா வைரவேலவன், விமல் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தற்போது இயக்குநர் திருச்செல்வமும் இணைந்துள்ளதால் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. 


 பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் இணையத்திலும் தினசரி எதிர்நீச்சல் சீரியல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் முழுக்க குணசேகரனின் சொத்தில் 40%  ஜீவானந்தம் எடுத்து கொண்ட நிலையில், அதுதொடர்பாக நியாயம் கேட்கப்போன இடத்தில் கலவரம் நடந்த காட்சிகள் ஒளிபரப்பானது. சொத்துபோன கவலையில் குணசேகரனுக்கு நெஞ்சுவலியே வந்து விட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போலவும், குடும்பத்தின் பெண்கள் ஜீவானந்தத்தை சந்தித்து சொத்துகளை வாங்கலாம் என யோசிப்பது தொடர்பான காட்சிகள் தற்போது சென்றுக் கொண்டிருக்கிறது. 


இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தம்பியாக வரும் கதிரும், தங்கையாக வரும் ஆதிரையும் கில்லி படத்தில் இடம் பெற்ற ‘கொக்கர கொக்கரக்கோ’ பாடலுக்கு ரீல்ஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும், “அங்க அண்ணன் சாக கெடக்குறாரு.. இங்க ஜாலியா டான்ஸ் ஆடிட்டு இருக்கீங்க?’ என கிண்டலாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.