சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் ஒரு வழியாக ஆதிரையை வலுக்கட்டாயமாக கரிகாலனுக்கு கல்யாணம் செய்து வைத்து அவளை ஜான்சி ராணி வீட்டிலேயே தள்ளிவிட்டு வந்து விட்டார் குணசேகரன். நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
வீட்டிற்கு வந்த அம்மா விசாலாட்சியிடம் சத்தம் போட்டுக்கொண்டு இருக்கிறார். ”என்னை அவமானப்படுத்துவதற்காக இத்தனை நாளாக காத்திருந்து பழிவாங்கிவிட்டாய். வீட்டில் இருக்கும் பொம்பளைகளை அடக்கி வைக்க துப்பில்லை உனக்கு எதுக்குடா மீசை, வேட்டி சட்டை என ஊரில் இருக்கும் அனைவரும் என்னை பார்த்து சிரிக்கிறார்கள். நாங்க தாலி கட்ட வைச்ச அழக நீ நேர்ல வந்து பார்த்து இருக்கணும். நாளைக்கு பேப்பர்ல தலைப்பு செய்தியாக வரும் பார்த்து சந்தோஷப்படுங்க” என்கிறார் குணசேகரன். ”ஐந்தாவதாக எதுக்கு நீ ஒரு பொம்பள பிள்ளையை பெத்த அதுக்கு நீ பெத்துக்காமலேயே இருந்து இருக்கலாம். அவள் சாப்பிட்டது, படித்தது, போட்டது எல்லாமே என்னோட காசுலதான். என்னோட தம்பிகளை காட்டிலும் அவளுக்கு தான் அதிகமாக செலவு செய்தேன். கல்யாணம் மட்டும் அவளோட இஷ்டத்துக்கு நடக்க விட்டுவிடுவேனா. என்னோட விருப்பத்துக்கு தான் பண்ணுவேன். வரட்டும் இன்னைக்கு உங்களோட தலைவி வரட்டும் நல்ல வேட்டு இருக்கு. என்கிட்ட இருந்து உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது” என கத்திக்கொண்டு இருக்கிறார் குணசேகரன்.
குணசேகரன் பேசுவதை தாங்கிக்கொள்ள முடியாத ஈஸ்வரி, “எந்த விதத்தில் நாங்க குறைந்து போய்விட்டோம். எங்களோட வாழ்க்கையை முடிவெடுக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது. இதை பார்த்து வளரும் குழந்தைகள் எப்படி வளருவாங்க” என கேட்கிறாள். குணசேகரன் சொல்வதுதான் இந்த வீட்டில் சட்டம். அதை மீறினால் ஆதிரைக்கு நடந்தது தான் உங்களுக்கும் நடக்கும். இந்த வீட்டை விட்டு யாரும் வெளியில் போகக்கூடாது என கண்டிஷன் போடுகிறார்.
அந்த நேரம் பார்த்து ஜனனியும் சக்தியும் அங்கு வருகிறார்கள். எல்லாரும் உள்ள வாங்க உங்களுக்காக தான் காத்திருக்கிறேன். இவங்க கிட்ட என்ன அண்ணன் பேசிட்டு இருக்கீங்க வெளியே விரட்டி விடுங்க என துள்ளுகிறான் கதிர். என்னை எதிர்த்து ஆதிரை கல்யாணத்தை செய்து காட்டுகிறேன் என சவால் விட்டியே இப்போ உன்னோட மூஞ்சியை எங்கே கொண்டு போய் வைச்சுக்குவ என ஜனனியிடம் கேட்கிறார். என் முன்னால் தோற்று போய் நிக்குற. இவளை தவிர எல்லாரும் என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டு உள்ளே செல்லுங்கள் என்கிறார்.
கதிர் ஜனனியை அடிக்க கை ஓங்கவும் சக்தி அவனை அறைந்து விடுகிறான். ”என்னோட பொண்டாட்டி மேல யாராவது கை வச்சு பாருங்க வெட்டி விடுவேன் என்கிறான். புருஷன் என்பவன் பொண்டாட்டிக்கு காவலாக இருக்க வேண்டும் அவர்களை அடக்கி அடிமையாக வைத்து இருக்கக்கூடாது” என்கிறான் சக்தி. ”உங்கள நம்பி ஏமாந்து விட்டேன். ஆடம்பரமான குணசேகரனை தான் எனக்கு தெரியும் ஆனால் நீங்கள் இவ்வளவு கீழ்தரமானவர் என்பது இப்போது தான் தெரிந்து கொண்டேன். இந்த குருட்டு புத்தி உங்களை விட்டு போகாது. மற்றவர்கள் உங்களை நல்லவன் என சொல்ல வேண்டும் என அலையுறீங்க. ஆனால் ஒருபோதும் அது நடக்கவே நடக்காது. காசு பணம் மட்டும் தான் வரும் மனிதர்கள் அனைவரையும் தொலைத்துவிட்டு தனியாக நிற்க போகிறீர்கள்” என ஆத்திரத்தை கொட்டிவிடுகிறான் சக்தி. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.