ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.


நேற்றைய எபிசோடில் பரணி கார்த்தியை காதலிக்கும் விஷயம் சண்முகம் மற்றும் தங்கைகளுக்கு தெரிய வந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது வீட்டுக்கு வந்த தங்கைகள் நான்கு பேரும் அண்ணனுக்கு பிடிச்ச மாதிரி எதுவும் நடக்க மாட்டேங்குது, அண்ணனுக்கு பரணியை பிடிக்கும் என்ற விஷயம் கூட பரணிக்கு தெரியாது, அண்ணன் வாழ்க்கை எப்படி அமையும் என்று ஜாதகம் பார்க்கலாம் என்று சொல்ல எல்லோரும் சம்மதிக்கின்றனர்.


இங்கே சௌந்தரபாண்டி கூப்பிட்டதால் சண்முகம் வீட்டுக்கு வர அப்போது அவர் கல்யாண விஷயம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்க சண்முகத்திற்கு பரணியை பார்த்ததும் கார்த்தி ப்ரபோஸ் செய்த விஷயங்கள் கண்முன் வந்து போக சௌந்தரபாண்டி சொல்வதை காதில் வாங்காமல் இருக்கிறான்‌. உடனே சௌந்தரபாண்டி டேய் என தட்டி எழுப்ப பிறகு நீங்க சொல்றத தான் கேட்டுக்கிட்டு இருந்தேன் என சண்முகம் சொல்ல சௌந்தரபாண்டி நான் கடைசியா என்ன சொன்னேன்னு சொல் என குறுக்கு கேள்வி கேட்கிறார். ‌


உடனே நெய் உருக்குவதை பத்தி சொன்னீங்க என சொல்ல பரணி சிரித்து விடுகிறாள். சௌந்தரபாண்டி ஆமா நெய்ய உருக்கி என் தலையில ஊத்து உங்க அத்தை தலையிலயும் ஊத்து என கோபப்படுகிறார். அதோடு சௌந்தரபாண்டி கிளம்பியதும் பாக்கியம் என்ன ஆச்சு என கேட்க அப்பா கல்யாண விஷயம் பற்றி பேசிகிட்டு இருந்தா இவன் என்ன சைட் அடிச்சிட்டு இருக்கான் என்று பரணி ஷண்முகத்தை கலாய்க்கிறாள்.


அதன் பிறகு பாக்கியம் காபி போட போனதும் சண்முகம் கார்த்தி பத்தி கேட்க ஆமா அவனை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன், எங்களுக்கு நீ தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொல்ல சண்முகம் நான் கல்யாணத்தை நிறுத்துவதாக தானே சொன்னேன் என்று கேட்கிறான். கல்யாணம் நிறுத்தும் நீ தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என பரணி சொல்ல சண்முகம் எதுவும் பேசாமல் இருக்கிறான்.


ஜோசியரிடம் வந்த தங்கைகள் அண்ணனுக்கு தெரியாமல் வந்திருப்பதாகவும் அவருக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் என சொல்லி ஜாதகத்தை எடுத்துக் கொடுக்க ஜோசியர் என்னிடமே சண்முகம் ஜாதகம் இருக்கு என சொல்லிக் கொண்டிருக்க அப்போது வெளியில் யாரோ ஒருவர் கூப்பிட ஜோசியர் எழுந்து செல்கிறார். அங்கே இருந்த ஜாதகங்களில் பரணியின் ஜாதகமும் இருக்க அதை எடுத்து தங்கைகள் கொடுக்க அதை பார்த்த ஜோசியர் கண்டிப்பா சண்முகத்துக்கு இந்த பொண்ணோட தான் கல்யாணம் நடக்கும் அதை யாராலும் மாற்ற முடியாது என சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.


அடுத்ததாக சௌந்தரபாண்டி சாப்பிட்டு கொண்டிருக்கும்போது முத்து பாண்டியிடம் நீ வரதட்சணை எதுவும் வேண்டாம்னு சொல்லிட்ட ஊர்ல இருக்கவங்க எல்லாரும் உன் பையனுக்கு குறை ஏதாவது இருக்கான்னு கேட்கிறானுங்க என்று சொல்ல முத்துப்பாண்டி அதை நான் பார்த்திருக்கிறேன் என செல்கிறான். இருந்தாலும் சௌந்தரபாண்டி அவன் கோமணத்தை உருவாமல் விடக்கூடாது என பாக்கியத்தை கூட்டிக்கொண்டு சண்முகம் வீட்டுக்கு கிளம்புகிறான்.


இங்கே சண்முகம் அப்பாவிடம் இனி கொஞ்சம் அளவா குடி என சொல்லி கொண்டிருக்க சௌந்தரபாண்டி வீட்டுக்கு வருகிறார். வைகுண்டம் பாக்கியத்தை அழைத்துக் கொண்டு போக சௌந்தர பாண்டி காரில் மஞ்ச கலர் பை இருக்கும் அதை எடுத்துட்டு வா என சொன்னதும் சண்முகம் அதை எடுத்து வந்து கொடுக்க திரும்பவும் அதை சண்முகத்திடமே கொடுக்கிறார்.


இதுல 25 லட்சம் ரூபாய் பணம் இருக்கு நான் என் பொண்ணுக்கு ஆடம்பரமா கல்யாணம் பண்ணும் போது நீ மட்டும் எதுவும் பண்ணலனா ஊர்ல இருக்கவங்க கேள்வி மேல கேள்வி கேப்பாங்க அது உனக்கு நல்லா இருக்காது அதனால இந்த பணத்தை வைத்துக்கொண்டு நான் செய்யற மாதிரி செய் என்று சொல்ல சண்முகம் தங்கச்சிக்கு நான் என்னால முடிஞ்சத கண்டிப்பா செய்வேன் என சொல்ல இந்த ஒரு வார்த்தை போதும் உன்னுடைய கோமணத்தை உருவாமல் விட மாட்டேன் என சௌந்தரபாண்டி மைண்ட் வாய்ஸில் பேசும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.