Ethir neechal September 12 promo : குணசேகரனின் கம்பீரக் குரலை மிஸ் பண்ணும் ரசிகர்கள்.. இன்றைய எதிர்நீச்சல் ப்ரோமோவில் நடந்தது என்ன?

பெரிய வெடிதான்.. புலம்பும் குணசேகரனை ஏற்றிவிடும் கரிகாலன்... இன்றைய எதிர் நீச்சல் ப்ரோமோ 

Continues below advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் சமையல் ஆர்டரை டெலிவரி செய்வதற்காக மிகவும் பரபரப்பாக வேலைகள் நடந்து கொண்டு இருக்க கரிகாலன் சொன்னதை கேட்டு கிச்சனில் வந்து பார்த்து ஷாக்காகிறார் விசாலாட்சி அம்மா. நந்தினி நடந்த உண்மைகளை எல்லாம் சொல்லி அவரின் ஆதரவை கேட்கிறாள். முதலில் முடியாது என மறுத்தாலும் விசாலாட்சி அம்மா கரிகாலனை திசை திருப்பி தன்னுடைய மறைமுகமான ஆதரவை தெரிவித்தார். 

Continues below advertisement

எப்படியோ விசாலாட்சி அம்மாவை சமாளித்து வண்டியில் பாத்திரங்களை ஏற்றும் போது குணசேகரன் காரில் வந்து இறங்க அனைவரும் வசமாக மாட்டி கொள்கிறார்கள். எப்படியோ அவரையும் அன்னதானம், அத்தை தான் சொன்னாங்க அது இது என எதையோ சொல்லி சமாளித்துவிட்டு எஸ்கேப்பாகி விடுகிறார்கள் நந்தினியும் ஜனனியும்.

விசாலாட்சி அம்மாவிடம் சாமிக்கு வேண்டுதல் குறித்து கேட்ட போது அவர் எதுவும் புரியாமல் முழிக்கிறார். ஒரு வழியாக ரேணுகா செய்த சைகையை பார்த்து எதையோ சொல்லி சமாளித்துவிட்டு அங்கிருந்து நவுந்துவிடுகிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 


அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ  வெளியாகியுள்ளது. 

நந்தினி அந்த ஹோமுக்கு சென்று அனைவருக்கும் வாழை இலையில் உணவை பரிமாறுகிறாள். அவர்கள் அனைவரும் வயிறார சாப்பிடுவதை பார்த்து சக்தி, ஜனனி மற்றும் நந்தினி சந்தோஷப்படுகிறார்கள். வீட்டில் குணசேகரன் டைனிங் ஹாலில் உட்கார்ந்துகொண்டு இதை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்.

"வேண்டுதல் என சொல்லிட்டு ஒருத்தி பொங்கலை தூக்கிக்கிட்டு வெளில போறா. வீட்டுக்கு வந்தவளைக் கூட்டிக்கிட்டு குடுகுடுன்னு மேல ஒருத்தி ஓடுறா. இவங்க எதையுமே சாதாரணமாக செய்றது இல்லை. வைச்சா பெரிய வெடியாதான் வைக்கிறது" என சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதை ஈஸ்வரி கிச்சனில் இருந்து கேட்டு கொண்டு இருக்கிறாள். 

நந்தினி சமைத்ததற்கு ஹோம் உரிமையாளர்கள் நன்றி சொல்லி பணத்தை கொடுக்கிறார்கள். அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். 

இங்கே கரிகாலன் குணசேகரனை ஏற்றிவிடும் படி பேசிக்கொண்டு இருக்கிறான். "உங்களுக்கு எதிரா பல சதி வேலைகள் நடக்கும்னு மண்டையில ஓடிக்கிட்டே இருக்கு" என்கிறான் கரிகாலன். அதை கேட்டு கடுப்பான விசாலாட்சி அம்மா "இருக்குற குழப்பம் பத்தாதுன்னு நீ வேற குழப்பி விடுறியா?" என திட்டுகிறார். அதற்கு "எனக்கு என்னமோ உங்க மேலதான் டவுட்டே" என கரிகாலன் சொல்ல திறுதிறுவென முழிக்கிறார் விசாலாட்சி அம்மா. குணசேரனும் விசாலாட்சி அம்மாவை பார்த்து முறைக்கிறார்.

குணசேகரனின் கம்பீரக் குரலை எல்லா ரசிகர்களும் மிஸ் செய்கிறார்கள் என்பதை சமூக வலைதளங்களில் கேட்க, பார்க்க முடிகிறது

Continues below advertisement
Sponsored Links by Taboola