சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினி சமையல் செய்து வைத்து தயாராக காத்திருக்க ஜனனி வண்டியோடு வந்ததும் அனைத்தையும் வண்டியில் ஏற்ற தயாராகிறார்கள். நந்தினி நான் ஒரு முறை ஹாலில் யாராவது இருக்கிறார்களா என பார்த்துவிட்டு வருகிறேன் என சொல்லி எட்டிப்பார்க்க கரிகாலன் மாடியில் இருந்து இறங்கி வந்துகொண்டு இருக்கிறான். அதே நேரத்தில் விசாலாட்சி அம்மாவும் வர கரிகாலன் அவரிடத்தில் "கிச்சனுக்கா போறீங்க? பரண் மேல இருந்து அண்டா குண்டா எல்லாம் எடுத்து வைச்சு இருக்காங்க. ஆனா தூசியே இல்லாம வாசனையா இருக்கு என சொல்ல.. என்னடா உளற நான் போய் பார்த்துட்டு வருகிறேன்" என சொல்லி விசாலாட்சி அம்மா கிச்சனுக்கு போகிறார்.
அங்கே போய் பெரிய பெரிய பாத்திரங்களில் சேமித்து வைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி "என்னடி பண்ணறீங்க?" என கேட்கிறார். நந்தினி தயக்கத்துடன் தான் தொழில் தொடங்கியுள்ளதை பற்றி சொல்லி விசாலாட்சி அம்மாவுக்கு ஷாக் கொடுக்கிறாள். "நீங்க தான் அத்தை எங்களுக்கு சப்போர்ட்டா இருக்கணும். அப்படியே நாங்க அத புடிச்சுக்கிட்டு மேலே வந்துருவோம். ஜனனிக்கும் சக்திக்கும் சப்போர்ட் பண்ணற மாதிரி எங்களுக்கு பண்ணுங்க அத்தை" என்கிறாள் நந்தினி. "அவங்க எல்லாருக்கும் முன்னாடி சொல்லி செய்றாங்க உன்ன மாதிரி திருட்டுத்தனம் செய்யல" என விசாலாட்சி அம்மா சொல்ல "ப்ளீஸ் அத்தை அந்த கரிகாலனை கொஞ்சம் அந்த பக்கம் கூட்டிட்டுப்போனா, நாங்க இப்படியே இதை எடுத்துட்டு போயிடுவோம்" என்கிறாள். "இந்த விஷயம் மட்டும் பெரியவனுக்கும் உன்னோட புருஷனுக்கும் தெரிஞ்சுது அவ்வளவுதான். என்னால முடியாது" என சொல்லி வெளியே சென்று கரிகாலனை ஹனிமூன் பத்தி பேசலாம் வா என மாடிக்கு அழைத்து சென்று விடுகிறார். அத்தை மறைமுகமாக சப்போர்ட் செய்ததை நினைத்து சந்தோஷமாக வண்டியில் பாத்திரங்களை ஏத்துகிறார்கள். அந்த நேரம் பார்த்து குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் காரில் வந்து இறங்க இவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள்.
நேற்றைய எபிசோட்தான் குணசேகரனாக மாரிமுத்து நடித்த கடைசி எபிசோட் எனவும் ரசிகர்களால் விவாதிக்கப்படுகிறது.
மனதில் என்றென்றும் வாழ்வார் மாரிமுத்து