சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் பிரபலமான தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர். பல வாரங்களாக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த அருண் ஆதிரை திருமணம் கடைசியில் நடைபெறாமல் போனது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அருணிடம் ஒருமுறையாவது பேசிவிட வேண்டுமென துடிக்கும் ஆதிரையை அருண் அண்ணன் எஸ்.கே.ஆர் திட்டி போனை வைத்துவிடுகிறார். அருணை பற்றி தவறாக நினைத்து கொண்ட ஆதிரை விரக்தியில் ரெஜிஸ்டர் ஆபிஸில் கையெழுத்து போட்டுவிடுகிறாள். எப்படியோ கரிகாலன் - ஆதிரை திருமணத்தை முடித்து விட்ட கர்வத்தில் இருக்கிறார் குணசேகரன்.
ஆதிரையை கையெழுத்துப்போட விடாமல் எப்படியாவது தடுத்து விட வேண்டும் என வேகமாக ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்த ஜனனிக்கும் , சக்திக்கும், ஆதிரை கையெழுத்து போட்டது தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்கள். விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஆதிரை அனைவரும் சேர்ந்து பிளான் போட்டு என்னுடைய வாழ்க்கையை காலி செய்துவிட்டீர்கள் என ஜனனியிடம் கோபித்துக்கொண்டு அங்கிருந்து அழுதுகொண்டே சென்று விடுகிறாள். அவளை அனைவரும் கரிகாலன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். இத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
போன் செய்த சாருலதா ஜனனியை உடனே மருத்துவமனைக்கு வர சொல்ல அவளும் சக்தியும் மருத்துமனைக்கு செல்கிறார்கள். அங்கே அருண் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டு இருப்பதை பார்த்த இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். சாருலதா ஜனனியை பார்த்து, ”என்ன பண்ணி வைச்சு இருக்க பாரு?” என்கிறார். ”இல்ல மேடம் நீங்க ஆரம்பித்து வைத்ததை நான் நல்லபடியாக முடித்து வைக்க வேண்டும் என ட்ரை பண்ணேன் மேடம்” என ஜனனி சொல்ல, “அது எப்படி வந்து முடிந்து இருக்கிறது என்பதை பார்த்தியா?” என எஸ்.கே.ஆர் ஜனனியை திட்டுகிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு வந்து இறங்குகிறார் குணசேகரன். அவரிடம் விசாலாட்சி, ”என்னுடைய பொண்ணு எங்கே” என கேட்க, “அவள் இனி அவள் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருப்பா” என சொல்கிறார் குணசேகரன். ரேணுகாவும் நந்தினியும் மேலே இருந்து குணசேகரன் சத்தம் போடுவதை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ”உங்க பேச்சும் தோரணையும்.. இனி எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டுகிறேன்” என்று சொல்ல, விசாலாட்சி ”வாயை மூடுடா” என குணசேகரனை பார்த்து கத்துகிறார். இதுதான் இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடின் ப்ரோமோ.
அடுத்து ஜனனி எடுக்க போகும் முடிவு என்ன? ஆதிரை என்ன செய்ய போகிறாள்? குணசேகரன் அவர்களை எப்படி பழிவாங்க போகிறார் என்பதை இன்று இரவு எபிசோடில் தெரியவரும்.