சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரனை பார்க்க வந்த ஈஸ்வரி, நந்தினி, சக்தி மற்றும் ஜனனியை அநாகரீகமாக பேசி அங்கிருந்து விரட்டி விடுகிறான் கதிர். சத்தம் போட்டு அங்கு இருக்கும் அனைவருக்கும் தொந்தரவாக இருந்ததால் நர்ஸ் வந்து அவர்களை அங்கிருந்து கிளம்ப சொல்கிறார். கதிர் பேசுவதை தாங்க முடியாமல் கீழே இறங்கி வந்து விடுகிறார்கள்.
ஈஸ்வரி,ஜனனி மற்றும் நந்தினி ஜீவானந்தத்தை சந்தித்து அவரிடம் நியாயம் கேட்பதற்காக செல்ல முடிவெடுக்கிறார்கள். சொத்து திரும்பவும் வந்தால் மட்டுமே குணசேகரன் பழைய நிலைக்கு வருவார் என நந்தினி சொன்னதால் அவர்கள் மூவரும் இந்த முடிவை எடுக்கிறார்கள்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் குணசேகரனை டாக்டர் பரிசோதித்து விட்டு அவருக்கு வலது பக்கம் உள்ள கை மற்றும் கால் செயல் இழந்து விட்டது எனக் கூற, அதை கேட்ட தம்பிகள்,ஆடிட்டர் மற்றும் கரிகாலன் அதிர்ச்சி அடைகிறார்கள். மானம் மரியாதை போய் நான் வாழ்வதை காட்டிலும் டாக்டரிடம் எனக்கு ஊசி போட்டு கொல்ல சொல்லி விடுங்கள் என தம்பிகளிடம் சொல்கிறார் குணசேகரன்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ முன்னதாக வெளியாகியுள்ளது.
ஜனனி, ஈஸ்வரி மற்றும் நந்தினி ஜீவானந்தத்தை பார்க்க முயற்சிக்கிறார்கள். ஆனால் சந்திக்க முடியவில்லை. அந்த நேரத்தில் ஈஸ்வரி "கெளதம் மூலம் நான் ஜீவானந்தத்தை சந்திக்க விரும்புவதை பற்றி தெரிவித்தால் என்ன?" என யோசனை சொல்கிறாள். ஜனனி, “என்னால் முடியாது அக்கா.. நான் பேசமாட்டேன்” என மறுத்து விடுகிறாள். "அப்படி உனக்கு பேச கஷ்டமா இருந்தா நான் பேசுறேன்" என சொல்கிறாள் ஈஸ்வரி.
ஹாஸ்பிட்டலில் இருக்கும் குணசேகரன் என்னை எப்படி இங்க கூட்டிட்டு வந்தீங்க? என கேட்கிறார். கரிகாலன் உடனே "டூ வீலர்ல வைச்சுத்தான் கூட்டிட்டு வந்தோம் மாமா. எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் நீங்க உங்க நிலைமைய பாத்தீங்களா மாமா" என சொல்லி அழுகிறான்.
"குணசேகரன் மானத்தை நார் நாரா கிழிச்சிடீங்களேடா" எனச் சொல்லி வருத்தப்படுகிறார் குணசேகரன். அவரை பார்த்து அனைவரும் கதறுகிறார்கள். இதுதான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ.
ஈஸ்வரி கெளதம் மூலம் ஜீவானந்தத்தை சந்திக்க முயற்சி செய்வது பாசிட்டிவாக அமையுமா? அப்படி சந்தித்தால் ஜீவானந்தம் பதில் என்னவாக இருக்கும்? குணசேகரன் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ள இந்த பிரச்சனையில் இருந்து மீள்வாரா? இந்த கேள்விகளுக்கு பதில் விரைவில் வரும் எபிசோடுகளில் தெரியவரும்.