சன் டிவி சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் ஏராளமான ட்விஸ்ட் அண்ட் டர்னுடன் ஒளிபரப்பாகி  வருவதால் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. ஆதிரை திருமணத்தை வைத்து இத்தனை நாட்களாக சஸ்பென்ஸில் இருந்து வந்தது எதிர் நீச்சல் தொடர். ஜனனியின் பிளான் தான் அனைத்தும் என தெரிந்ததால் அவளை குணசேகரன் மன்னிப்பு கேட்க சொன்னதால் முடியாது என சொல்லி சக்தியும், ஜனனியும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.


 



ஜான்சி அடாவடித்தனம்:


பட்டம்மாளின் 40% ஷேருக்கும் குணசேகரன் வீட்டு மருமகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக ஆடிட்டர் வந்த கூறியதால் அடுத்து என்ன பிளான் பண்ணலாம் என்று தீவிரமாக யோசித்து கொண்டு இருக்கிறார் குணசேகரன். மறுபக்கம் ஆதிரை கரிகாலன் வீட்டில் கொடுமையை அனுபவித்து வருகிறாள். கரிகாலன் ஆதிரைக்கு கொஞ்சம் ஆதரவாக இருந்தாலும் ஜான்சியின் அடாவடிதனம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன் என்ற பெயரில் அவளை சித்திரவதை செய்து வருகிறாள். 


ஜனனியும் சக்தியும் தங்குவதற்காக ஹோட்டலில் ரூம் தேடி வருகிறார்கள் அந்த சமயத்தில் ஜனனியின் ப்ரெண்ட் அங்கு வந்து அவர்களை தன்னுடைய வீட்டுக்கு வந்து தங்க சொல்லி அழைத்து செல்கிறாள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 


 




இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கும் எதிர் நீச்சல் தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் குணசேகரன் நாடகத்தை துவங்கிவிட்டார். "என்னுடைய புள்ள சக்தியை பார்க்கணும் அவனை சீக்கிரம் வர சொல்லுங்க" என சீன் போட்டு வர வைக்கிறார். குணசேகரன் மனைவி ஈஸ்வரி "இது என்ன புது ட்ராமாவா இருக்கு"  என ஈஸ்வரி சொல்ல கடுப்பான குணசேகரன் போதும் வாயை மூடு என்கிறார். ஜனனியும் சக்தியும் வீட்டுக்கு வருகிறார்கள்.


"என்ன தான் என் மேல கோபம் இருந்தாலும் அண்ணன் கோபத்தில் தான் அப்படி பேசினார் என்பதை புரிந்து கொண்டு கூப்பிட்டதும் வந்த பாத்தியா அது தான் பாசம் என்பது" என்கிறார் குணசேகரன்.  அதற்கு சக்தி "நான் ஒன்னும் நீங்க கூப்பிட்டதற்காக வரவில்லை" என முறைப்பாக சொல்கிறான். "நான் உனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து எழுதி தந்து விடுகிறேன்" என குணசேகரன் சொல்ல "சொந்தமாக உழைத்து சாப்பிடுவதற்கான தெம்பு என்னுடைய உடம்பில் இருக்கிறது" என்கிறான் சக்தி. குணசேகரனை அறைந்தது போல இருந்த சக்தியின்  பதிலை கேட்டு ஈஸ்வரியும் மற்றவர்களும் சந்தோஷப்படுகிறார்கள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 



பட்டமளிடம் இருந்து கைரேகைகை எடுத்தவர்கள் யார் என்பதை ஜனனி கண்டுபிடிப்பாளா? மறைந்திருந்து குணசேகரனை தாக்கும் ஜீவானந்தம்  நேரடியாக மோதுவாரா? ஆதிரை நிலை என்ன? எதிர் நீச்சல் சீரியலில் இனி வரும் எபிசோடுகளில் இந்த கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.