சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் தர்ஷினியின் ஸ்கூலுக்கு சென்ற ஈஸ்வரி அவளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சிறிது நேரம் மனம் விட்டு பேசிக்கொண்டு இருக்கிறாள். "ரொம்ப மோசமான ஆள் தான் அப்பா. செத்துருன்னு சொல்லறாரு. நான் ஏன் அம்மா சாகணும். அப்பா மாதிரி மோசமானவங்க எல்லாம் மத்தவங்களுக்கு இம்சை கொடுத்து வாழும் போது நான் ஏன் சாகணும்' என விரக்தியில் பேசுகிறாள் தர்ஷினி. நம்மளோட தன்னம்பிக்கையை உடைத்து அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் இருப்பதற்காக செய்றது தான் இது எல்லாமே. அதனால நீ மனசு உடைஞ்சு போகாம உன்னோட குறிக்கோளை நோக்கி ஸ்ட்ராங்கா அடியெடுத்து வை. நான் உனக்கு சப்போர்ட்டாக என்றுமே இருப்பேன்" என தன்னம்பிக்கை கொடுக்கிறாள் ஈஸ்வரி. "உன்னை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. நீ நல்ல விளையாடுவ என எனக்கு தெரியும் ஆனால் முதல் தடவை அதை நேரில் பார்க்கும் போது அப்படியே புல்லரிச்சு போயிடுச்சு" என மகளை பார்த்து பூரிக்கிறாள்.
ஆடிட்டரை ஆபிஸில் சென்று குணசசேகரனும் கதிரும் சந்திக்கிறார்கள். பட்டம்மாள் 40% ஷேர் நாளைக்கு முடிவுக்கு வரப்போகிறது. நீங்க இல்லனா உங்க தம்பிங்க படிச்சு இருந்தாலாவது டெக்னிக்கலா புரிய வைக்க முடியும். எனக்கு வந்த தகவல் படி அந்த ஷேர் நாளைக்கு உங்க பெயரில் மாறவேண்டும். அப்படி இல்லை என்றால் அது உங்களின் கையை மீறி போய்விட்டது என அர்த்தம்" என சொன்னதும் கோபமான கதிர் எங்களுக்கு தான் அந்த சொத்து வரவேண்டும் என கத்துகிறான். அவனை சமாதானப்படுத்துகிறார் குணசேகரன். "நாளைக்கு அந்த ஷேர் முடிவுக்கு வருகிறது ஆனால் அது உங்களுக்கு சாதகமாக வருமா என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை" என்கிறார் ஆடிட்டர். கெழவி தான் கையெழுத்து போட்டு கொடுத்துடுச்சே பிறகு என்ன பிரச்சனை என கேட்கிறான் கதிர். "அதில் ஏதோ பிரச்சனை இருக்கு அது என்னனு தெரியல" என்கிறார் ஆடிட்டர். "எனக்கு இல்லைனா அந்த ஜனனிக்கு போகுமா அது எப்படி போகுது என நான் பார்க்கிறேன். நாளைக்கு எனக்கு சாதகமாக தான் வரும்" என சவால் விட்டு செல்கிறார் குணசேகரன்.
ஐஸ்வர்யா ஸ்கூலில் இருந்து வெகு தூரமாக நடந்து வருகிறாள். மறுபக்கம் தர்ஷினியும் ஈஸ்வரியும் ஆட்டோவில் வருகிறார்கள். வழியில் ஐஸ்வர்யாவை பார்த்து ஆட்டோவில் எற சொல்கிறார்கள் ஆனால் ஐஸ்வர்யா "இல்ல வேண்டாம் பெரியம்மா வீடு பக்கத்துல வந்துடுச்சு நான் நடந்தே வரேன் " என சொல்லிவிடுகிறாள். பிறகு மூவரும் பேசிக்கொண்டே நடந்து வருகிறார்கள். "இன்று நிறைய புது மனிதர்களை சந்தித்தேன், இப்படி நடந்து வருவதால் வைட்டமின் சத்து கிடைக்கிறது. எளிமையாக வாழ்வதால் பல நன்மைகள் இருக்கிறது இல்ல பெரியம்மா" என ஐஸ்வர்யா சொல்ல அதை கேட்டு சந்தோஷப்படுகிறாள் ஈஸ்வரி.
தாரா வீட்டில் உள்ள அனைவருக்கும் ஸ்கூலில் டீச்சரை அவள் எப்படி நடித்து சமாளித்தாள் என்பதை பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாள். அவள் பேசுவதை பார்த்து அனைவரும் சிரித்து கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் நந்தினி கதிரை பயங்கரமாக திட்டுகிறாள். "யாராவது அந்த ஆள் கை காலை உடைச்சா அவங்களுக்கு நான் கோயில் கட்டுவேன்" என வேடிக்கையாக சொன்னாலும் அதில் வெறுப்பு தெரிந்தது. அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கல்வெட்டு வைப்பது பற்றி சிரித்து பேசி கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.