சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் அப்பத்தாவை போய் நேரில் சந்தித்து அவரிடம் இருந்து சொத்துக்களை மீட்டெடுத்து வாங்கி வர சொல்லி குணசேகரன் வீட்டு மருமகள்கள் நால்வரையும் போக சொல்கிறார். "இவளுங்க ஒன்னும் கிழிக்க வேண்டாம்" என கர்வமாக கதிர் பேச அவனை குணசேகரன் "நமக்கு காரியம் தான் முக்கியம். நீ கொஞ்ச நேரம் அமைதியா இருப்பா" என அடக்குகிறார். 


 



ஜனனி, ஈஸ்வரி, நந்தினி மற்றும் ரேணுகா நால்வரும் ஒரு பொது இடத்தில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஈஸ்வரியின் கடந்த கால வாழ்க்கை திரும்பவும் வந்ததை பற்றி ஈஸ்வரி மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள். "ஜீவானந்தம் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் அதுவும் என்னை சார்ந்த ஒருவரால் நடக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை" என மிகவும் மன வேதனையில் பேசுகிறாள். 


ஜீவானந்தத்துடன் தான் அப்பத்தா இருப்பார் என்பதால் ஜீவானந்தம் எங்கு இருக்கிறார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக கௌதமுக்கு போன் செய்கிறாள் ஈஸ்வரி. கௌதம் போனை ஃபர்ஹானா எடுத்து பேசுகிறாள். ஜீவானந்தம் இருக்கும் இடத்தைப் பற்றி முதலில் சொல்ல முடியாது எனக் கூறியவர், பின்னர் ஈஸ்வரியின் வேண்டி கேட்டு கொண்டதால் அவள் அவர் இருக்கும் இடத்தை பற்றி சொல்கிறாள். நால்வரும் ஜீவானந்தத்தை சந்திக்க செல்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.


அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


 



காரில் நந்தினி, ஜனனி, ரேணுகா மற்றும் ஈஸ்வரி சென்று கொண்டு இருக்கும் போது ஜனனி மற்றவர்களிடத்தில் "ஜீவானந்தத்துக்கோ அல்லது அந்த குழந்தைக்காகவோ பரிதாபப்படுவது  மாதிரி நடந்துக்காதீங்க. அப்படி செய்தால் நாம் அவருகிட்ட தேடி போற உதவியும் கிடைக்காம போய்விடும்" என்கிறாள். 


மறுபக்கம் குணசேகரன் அடியாட்களுக்கு பேமெண்ட் கொடுக்காததால் கிள்ளிவளன் குணசேகரன் வீட்டுக்கே நேரடியாக சென்று விடுகிறார். அவரைப் பார்த்த கதிரும் குணசேகரனும் அதிர்ச்சி அடைகிறார்கள். "உங்களுக்கு வேலை ஆகணும்னா என்னை தேடிகிட்டு அங்க வருவீங்க. வேலை முடிஞ்சா உடனே அப்படியே கழண்டுகிட்டு நவுந்துருவீங்க" என சத்தம் போடுகிறார். 


 



கிள்ளிவளவன் சத்தம் போடுவதைக் கேட்டு விசாலாட்சி அம்மா உள்ளே இருந்து "யாரு பா அது" என கேட்கிறார். கதிர் வழக்கம் போல வாய் துடுக்காக பேச கொந்தளிக்கிறார் கிள்ளிவளவன். குணசேகரன் தான் அவரை சமாதானம் செய்கிறார். இது தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட். 


 




ஜீவானந்தத்தை சந்திக்க போகும் ஜனனியின் திட்டம் நிறைவேறுமா? கிள்ளிவளவனால் குணசேகரனுக்கு வரப்போகும் ஆபத்து என்ன என மிகவும் பரபரப்பான கட்டத்தில் எதிர் நீச்சல் (Ethir neechal) இன்றைய எபிசோட் இருக்கப்போகிறது.