சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் அப்பத்தா, ஜீவானந்தத்தோட தான் இருப்பாங்க என நினைக்குறேன் என ஜனனி சொல்கிறாள். நந்தினி ஜீவானந்தத்தின் மகளை பற்றி ஜனனியிடம் விசாரிக்கிறாள். "பாவிங்க அழகா இருந்த அந்த குடும்பத்தை இப்படி கலைச்சுட்டானுங்க. அந்த பொண்ணுக்கும் நம்ம தாரா வயசு தானே இருக்கும். அம்மா இல்லாம அந்த குழந்தை என்ன பாடுபடும்" என மிகவும் வருத்தப்பட்டு பேசுகிறாள்.
அதை பார்த்த ஜனனி "அக்கா நான் உங்ககிட்ட ஒன்னு சொல்றேன். ஜீவானந்தம் அல்லது அவர் பொண்ணு மேல நீங்க பரிதாபம் காட்ற மாதிரி நடந்துக்காதீங்க. அதை அவர் விரும்பமாட்டார். நாம போற காரியமும் நடக்காம போகவும் வாய்ப்பு உண்டு" என சொல்லி நந்தினியின் உணர்ச்சிகளை அடக்கி கொள்ள சொல்கிறாள் ஜனனி. ரேணுகாவும் அதையே தான் நந்தினியிடம் சொல்கிறாள்.
ஈஸ்வரி மட்டும் அமைதியாக உட்கார்ந்து வேதனைப்பட்டு கொண்டு இருக்கிறாள். அதை பார்த்த ரேணுகா "ஏன் அக்கா ஒரு மாதிரி இருக்கீங்க? எதையோ யோசித்து கொண்டே இருக்கீங்களே ஏன்? என கேட்கிறாள். 10 நாட்களுக்கு முன்னர் ஜீவானந்தத்தை மீண்டும் சந்திப்பேன் என நான் நினைக்கவில்லை. அதற்குள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது" என்கிறாள்.
ஈஸ்வரி தனது கடந்த கால வாழ்க்கை, கல்லூரி நாட்களை எண்ணி பார்த்து மனம் வருந்தி பேசுகிறாள். அந்த சமயத்தில் ஜீவானந்தத்தை சந்தித்ததை பற்றியும் அந்த சந்தோஷமான உணர்வுகளை பற்றியும் பகிர்கிறாள். "எனது இந்த 18 வருட திருமண வாழ்க்கை ஒரு தோல்வி தான் ஆனால் அதனால் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தோற்றுவிட்டது என்ற அர்த்தம் இல்லை. இத்தனை காலத்தில் நம்முடைய மனசுக்கு சந்தோஷம் தந்த நொடிகள் சில இருக்கும். அவற்றை நாம் நம் மனதுக்குள் சென்று தேடி பார்த்து திறந்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும்" என்கிறாள்.
குணசேகரன் வீட்டுக்கு அவருடைய ஆள் ஒருவன் வந்து அவரை கிளப்பின் சேர்மேன் எலெக்ஷனில் நிற்க சொல்லி ஏத்திவிட்டு கொண்டு இருக்கிறான். அந்த சமயத்தில் கிள்ளிவளவன் வீட்டுக்கே வந்து விடுகிறார். "எதுக்குயா இங்க வந்த?" என கதிர் அவரிடம் கேட்கிறான். "உங்களுக்கு ஓரு வேலை ஆகணும்னா என்ன தேடி வருவீங்க. வேலை முடிந்ததும் அப்படியே கட் பண்ணிட்டு நவுந்துறீங்க?" என்கிறார் கிள்ளிவளவன். "போன் பண்ணாலும் இந்த பய கட் பண்ணிவிடுறான். இல்லாட்டி எடுத்தாலும் பேசாம இருக்கான்" என சொல்ல "எனக்கு எந்த போனும் வரல நான் அதையும் கட் பண்ணவும் இல்லை" என்கிறான் கதிர்.
"உங்க பேமெண்ட் தானே சார் அதெல்லாம் கரெக்டா வந்துடும்" என குணசேகரன் சொல்கிறார். "அதெல்லாம் எப்படி வாங்குறது என எனக்கு தெரியும். நான் அதுக்காக வரவில்லை. அந்த ஜீவானந்தம் பய இந்த ஏரியாவுல தான் சுத்திகிட்டு இருக்கான் என எனக்கு தகவல் வந்தது. அவனை ஏன் விட்டு வைக்கணும். அது தான் சொல்லலாம் என வந்தேன்" என கிள்ளிவளவன் சொல்கிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.