சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியிடம் ஜீவானந்தம் தனியாகப் பேச வேண்டும் என சொல்கிறார்.


“காலேஜ் படிக்கும்போது ஈஸ்வரிக்கு இப்படி கோபம் வராதே. வெளி உலகமே தெரியாமல் வெகுளித்தனமாக யாரையும் நிமிர்ந்து பார்க்காத ஈஸ்வரி, தன்னை விடவும் பதினேழு வயது மூத்த குணசேகரனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதால் மன அழுத்தத்தில் தள்ளப்பட்ட ஈஸ்வரியின் வெளிப்பாடு! 


இளம் வயதில் ஈஸ்வரி மீது ஈர்க்கப்பட்டு பெண் கேட்கும் வரை வந்த பையன் பெயர் ஜீவானந்தம், அது உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை” என சொல்லி ஈஸ்வரிக்கு அதிர்ச்சியைத் தந்தார் ஜீவானந்தம்.   


 



இதை சற்றும் எதிர்பார்க்காத ஈஸ்வரியால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. கண்ணீர் மூலம் மனபாரத்தை வெளிப்படுத்துகிறாள். மறுப்பக்கம் ரேணுகா ஆன்லைன் மூலம் கிளாஸை ஜனனி வீட்டில் இருந்த படி தொடங்கும் சமயத்தில், ஞானமும் கதிரும் வந்து பெரிய பிரச்சினை செய்து அவர்களை ஜனனியுடன் சேரக்கூடாது என சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 


அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடில் கதிர் மற்றும் ஞானம் எங்கோ வெளியில் சென்று காரில் வந்து இறங்குகிறார்கள். வீட்டு வாசலில் ரேணுகா, ஜனனி, நந்தினி உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கதிரையும் ஞானத்தையும் பார்த்ததும் "எங்குட்டு தான் போறாங்களோ தெரியல" என நந்தினி சொல்ல "இந்த ஜீவனந்தத்தை பார்த்து பயந்துகிட்டு இங்கிட்டு ஓடிவந்துரங்களோ" என ரேணுகா கிண்டலடித்து சிரித்து கொள்கிறார்கள். கதிர் முகம் அப்படியே சிவந்து போகிறது. 


 



ஜீவானந்தம் பற்றிய தகவல் ஏதாவது கிடைக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக கவுஞ்சி சென்ற சக்தி வீடு திரும்புகிறான். "என்ன சக்தி தகவல் ஏதாவது கிடைச்சுதா?" என ரேணுகா சக்தியிடம் கேட்கிறாள். "அவர் எங்க இருக்குறாரு என கேட்டா, ஒரு பய வாய திறக்க மாட்டேங்குறானுங்க" என சக்தி சொல்கிறான். "அந்த அளவுக்கு ட்ரெயின் பண்ணி வைச்சு இருக்கான்" என நந்தினி சொல்கிறாள். இது தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட்.  


 



சக்தி ஏதாவது ஒரு ஸ்ட்ராங்கான தகவலுடன் வருவான் அதை வைத்து ஜீவானந்தத்தை நேரில் சென்று சந்தித்துப் பேசலாம், அவனது நோக்கம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் என ஜனனி மிகவும் நம்பிக்கையுடன் இருந்தாள்.


ஆனால் சக்தி இப்படி எதுவுமே கிடைக்கவில்லை என திரும்பி வந்துள்ளதால் அடுத்ததாக ஜனனி என்ன செய்யப் போகிறாள்? அவளின் அடுத்த கட்ட மூவ் என்னவாக இருக்கும்? ஜீவானந்தம் பற்றி ஈஸ்வரிக்கு தெரிந்த உண்மையை மற்றவர்களிடம் இதை பற்றி சொல்வாளா? என மிகவும் சஸ்பென்ஸாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர் நீச்சல் தொடர்.