விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான குக்கிங் கம் காமெடி கலந்த என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'(Cook With Comali). கடந்த மூன்று சீசன்களாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற ஒரு நிகழ்ச்சி இதுவாகும். தற்போது நான்காவது சீசன் மிகவும் குதூகலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் உலகளவில் மிக பெரிய செலிபிரிட்டியாக பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில் இந்த சீனில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒரு மாடல் அழகி மற்றும் நடிகையுமான Andreanne Nouyhgat ஒரு போட்டியாளராக பங்கேற்றார். பலருக்கும் பரிச்சயமான முகமென்றாலும்  பலருக்கும் தெரியாத ஒரு தகவல் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது.



2007ம் ஆண்டு தமிழ் படத்தில் என்ட்ரி கொடுத்தாலும் இவரை கவனம் ஈர்க்க செய்த திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ரஜினி முருகன்' திரைப்படம். இப்படத்தில் நடிகர் சூரியின் வெளிநாட்டு காதலிக்காக நடித்திருந்தார் ஆண்ட்ரியன். அதை தொடர்ந்து எனக்குள் ஒருவன், சிவாஜி என பல திரைப்படங்களில் நடடித்துள்ளார். அது மட்டுமின்றி மேல்நாட்டு மருமகன் என படத்தின் ஹீரோயினாகவும் நடித்துள்ளார் ஆண்ட்ரியன். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்ட்ரியன் சமையலிலும் ஜோராக சமைத்து நடுவர்களை அசத்தினார். மிக சிறந்த போட்டியாளராக மற்ற கண்டஸ்டண்ட்ஸுக்கு டஃப் கொடுத்து வந்தார். அந்த வகையில் ஆண்ட்ரியன் சில வாரங்களுக்கு முன்னர் தான் எலிமினேட் செய்யப்பட்டார். மிகவும் திறமையான ஒரு போட்டியாளர் வெளியேறியதால் மற்ற போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் மிகவும் வருத்தமடைந்தனர். இவரின் கலகலப்பான பேச்சுக்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 


எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களுக்காக வைல்ட் கார்டு ரவுண்டு நடைபெறுவது வழக்கம். அதில் வெற்றி பெரும் போட்டியாளர் நேரடியாக பைனல் ரவுண்டுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் வெளியேறிய போட்டியாளர்களுக்கான வைல்ட் கார்டு ரவுண்டு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. அதில் சிறப்பாக சமைத்து நடுவர்களை அசத்தி பைனல் ரவுண்டுக்கு தேர்வாகியுள்ளார் ஆண்ட்ரியன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டிக்கெட் டு பினாலே ரவுண்டில் வெற்றிபெற்று முதல் பைனலிஸ்ட்டாக விசித்திரா தேர்வானார். அவரை தொடர்ந்து ஸ்ருஷ்டி, சிவாங்கி மற்றும் மைம் கோபி உள்ளிட்டோர் தேர்வான நிலையில் தற்போது ஆண்ட்ரியன் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். விரைவில் குக் வித் கோமாளி சீசன் 4 இறுதி சுற்று நடைபெறவுள்ளது. அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.