சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் முடிவுக்கு வரவுள்ள நிலையில் புது சீரியல் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 


சின்னத்திரை நிகழ்ச்சிகள் வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.  என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி பார்வையாளர்கள் நகர்ந்தாலும் வார நாட்களில் சீரியலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர். அதனால் தான் காலம் கடந்தும் பல சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் மறக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. 






என்னதான் விஜய் டிவி, ஜீ தமிழ் சீரியல்கள் சில ஆண்டுகளுக்கு முன் வந்தாலும் அதற்கு முன்னாள் இருந்து 2 தசாப்தத்திற்கும் மேலாக மக்களை கவர்ந்து வரும் சன் டிவி சீரியல்கள் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு அனைத்து சீரியல்களும் பெரும் வரவேற்பை பெற்றவை. இவற்றை மறுஒளிபரப்பு செய்தால் கூட பார்க்க மக்கள் ரெடியாகவே இருக்கிறார்கள். 


அந்த வகையில் சன் டிவியில் 8 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சின்னத்திரை வரலாற்றில் அதிக எபிசோடுகளை கடந்த சீரியல் என்ற சிறப்பை பெற்றுள்ள சந்திரலேகா சரிகம நிறுவனம் இந்த தொடரை தயாரித்து வந்த நிலையில் இதில் சந்திரா கேரக்டரில் நடிக்கும் ஸ்வேதா, லேகா கேரக்டரில் நடிக்கும் நாகஸ்ரீ இருவரும் முதல் எபிசோடில் இருந்து முழு அர்ப்பணிப்புடன் இந்த சீரியலில் இருந்து விலகாமல் இருந்து வருகின்றனர். 



இந்த சீரியல் வரும் வாரத்துடன் 2000 எபிசோட்களை கடந்த பெருமையோடு நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து இதே தயாரிப்பு நிறுவனம் சார்பில் ”இலக்கியா” என்ற தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியலில் ரூபஸ்ரீ, நந்தன், ஹீமாபிந்து, சுஷ்மா, டெல்லி கணேஷ், சதீஷ், பரத் கல்யாண், ராணி, காயத்ரி ப்ரியா, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சரிகம நிறுவனம் கதையையும்,திரைக்கதையை சேக்கிழாரும் எழுத சாய் மருது இயக்குகிறார். சந்திரலேகா சீரியல் நிறைவடைவதால் ரசிகர்கள் பலரும் தங்கள் நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.