சின்னத்திரை நடிகையான அர்ச்சனா முகம் பளபளப்பாக தெரிவித்த டிப்ஸ் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பொதுவாக பிரபலங்களாக இருக்கும் நபர்களை பின்தொடரும் ரசிகர்கள் அனைவரும் அவர்களைப் போல நடை, உடை, பாவனை, ஹேர்ஸ்டைல் தொடங்கி எல்லா விஷயங்களையும் மாற்றிக் கொள்வார்கள். மேலும் பிரபலங்கள் சொல்லும் பிட்னெஸ் மற்றும் சமையல் தொடர்பான தகவல்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அதனை சரியாக ஃபாலோ பண்ணுவார்கள். அந்த வகையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா தெரிவித்த டிப்ஸ் வீடியோ வைரலாகியுள்ளது. 


சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கலையுலக பயணத்தை தொடங்கிய விஜே அர்ச்சனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தேன்மொழி பி.ஏ., , இந்திரா என்ற சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அவர், காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 


இதனிடையே நடப்பாண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் பங்கேற்றார். ஆரம்பம் முதலே ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவர் கடைசியாக பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் வைல்ட் கார்ட் எண்ட்ரீ மூலம் நுழைந்து டைட்டில் வென்ற முதல் பிக்பாஸ் போட்டியாளர் என்ற சிறப்பை அர்ச்சனா பெற்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின் அவருக்கு பெரிய திரையில் வாய்ப்பு வந்ததாக சொல்லப்படுகிறது. 


இந்நிலையில் முகம் பளபளப்பாக இருக்க அவர் டிப்ஸ் ஒன்றை சொல்லியுள்ளார். பழைய நேர்காணல் ஒன்றில், இந்த டிப்ஸை தான் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் செயல்படுத்தி பார்த்ததாகவும் கூறியுள்ளார். அதாவது உடலுக்கு நன்மை பயக்கும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் அடங்கிய ABC ஜூஸில் அதற்கு பதிலாக பதிலாக ஆம்லா (பெரிய நெல்லி), பீட்ரூட், தேங்காய் கொண்டு செய்யப்படும் ஜூஸில் நாட்டு சர்க்கரை கலந்து குடித்தேன். கிட்டதட்ட 7 மாதம் குடித்த நிலையில் என்னுடைய முகம் பளபளப்பாக மாறியது. எல்லாரும் இதனை முயற்சி செய்யலாம் என தெரிவித்துள்ளார். 


அதேசமயம் இந்த ஏபிசி ஜூஸை ஆப்பிள், பீட்ரூட், கேரட் அல்லது ஆம்லா (பெரிய நெல்லி), பீட்ரூட், தேங்காய்  உள்ளிட்ட பொருட்களை கொண்டு குடிக்க விரும்புபவர்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின்படி பருகலாம். இதனை வாரத்துக்கு 3 முறை குடித்தால் உடலுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றது.




மேலும் படிக்க: AR Rahman: ரஜினிகாந்த் மகளா இருப்பது கஷ்டம்: எதை செய்தாலும் விமர்சனம்: ஐஸ்வர்யாவுக்காக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்!