விஜய் டிவி சீரியல்களில் மிகவும் பரபரப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கும் தொடர் 'பாரதி கண்ணம்மா'. இந்த வார ப்ரோமோ ரசிகர்களை சற்று ஆசுவாசப்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் இத்தனை நாளாக கண்ணம்மாவை சந்தேகப்பட்டு வார்த்தைகளால் துன்புறுத்த பாரதிக்கு உண்மை தெரியவரும் நேரம் தான் இந்த வாரத்தின் கதைக்களம் என்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அடுத்ததாக கடத்திச் செல்லப்பட்ட ஹேமாவின் நிலை குறித்து தான் மிகவும் கவலைப்பட்டு வந்தார்கள். அந்த வகையில் இன்றைய 'பாரதி கண்ணம்மா' எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை காணலாம்.
ஐ.சி.யூ வில் ஹேமா அனுமதி :
பெரும்பாடு பட்டு கண்ணம்மா ஹேமாவை அடைத்து வைத்து இருந்த வண்டியை மடக்கி ஹேமாவை காப்பாற்றுகிறார். அவசரஅவசரமாக ஹேமாவோடு மருத்துவமனைக்கு விரைகிறது பாரதியின் குடும்பம். ஹேமாவின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறாள். பாரதியின் அம்மா சௌந்தர்யா மிகவும் கலக்கத்துடன் பாரதியின் அப்பா வேணு தோளில் சாய்ந்து அழ அவர் சௌந்தர்யாவை சமாதானப்படுத்துகிறார். மறுபக்கம் பாரதி இன்று வரப்போகும் DNA ரிசல்ட் தான் நான் வாழ்வதா இல்லை சாவதா என்பதை உறுதிசெய்யபோகிறது. அது கண்ணம்மாவிடம் தான் உள்ளது. ரிசல்ட் நல்லபடியாக இருந்தால் நான் கண்ணம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு ஆவலுடன் சேர்ந்து அவளுடன் வாழத் தயார். ஆனால் அதுவே ரிசல்ட் மாறி வந்தால் கண்ணம்மா தான் என்னுடைய தற்கொலைக்கு காரணம் என்பதை எழுதி வைத்து விட்டு மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக முடிவெடுக்கிறார்.
உண்மையை உடைத்த டாக்டர் :
அவசர பிரிவில் இருக்கும் ஹேமாவை பரிசோதித்த மருத்துவர் ஹேமா நலமாக இருக்கிறாள். வெளி காயம் மட்டும் தான் என்பதால் சிறிது நேரத்தில் மயக்கத்தில் இருந்து முழித்து விடுவாள் என டாக்டர் கூறியதும் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள் குடும்பத்தினர். அகிலனுக்கு பாரதி மீது சந்தேகம் வருகிறது. ஒருவேளை பாரதி DNA ரிசல்ட் குறித்து தெரிந்து கொள்வதற்காக தான் டெல்லிக்கு சென்று இருப்பார் என்பதை யூகித்து கொண்டு அதை மற்றவர்களிடம் சொல்லலாமா வேண்டாமா என குழப்பத்தில் இருக்கிறார்.
அந்த பாகம் டாக்டரை நேரில் சந்தித்து DNA ரிசல்ட் குறித்து தெரிந்து கொள்வதற்காக செல்கிறார் பாரதி. டாக்டர் இந்த DNA டெஸ்ட் எடுப்பதற்கான காரணம் குறித்து கேட்ட உடன் நடந்த அத்தனை விஷயங்களையும் டாக்டரிடம் சொல்கிறார். உடனே டாக்டர் அப்பாவோடு குழந்தைகளின் பிளட் சாம்பிள் எப்படி மேட்ச் ஆகாமல் இருக்கும் என்றது அதிர்ச்சியடைகிறார் பாரதி. மூன்று பிளட் சாம்பிளும் பக்காவாக மேட்ச் ஆகிறது. இத்தனை நாட்களாக இது தெரியாமல் நீங்கள் தான் உங்கள் மனைவியை சந்தேகப்பட்டு இருக்குறீர்கள். இதை கேட்ட பாரதி கதறி அழுவதோடு இன்றைய எபிசொட் முடிவுக்கு வருகிறது. நாளை எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாளை பார்க்கலாம்.